• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அவங்க நன்றி சொன்னாங்க.. நான் வாழ்த்து சொன்னேன்.. டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சி டிவீட்

|
  நாங்குநேரியை கைப்பற்றியது அதிமுக..காங்கிரஸ் தோல்வி | aiadmk candidate reddiarpatti won in nanguneri

  சென்னை: "உழைச்சதுக்காக முதல்வரும், அமைச்சர் சிவி சண்முகமும் எனக்கு போனில் நன்றி சொன்னார்கள்.. நான் அவங்களுக்கு நன்றி வாழ்த்து சொன்னேன்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பாமக இல்லையென்றால், இடைத்தேர்தல் வெற்றி எளிதில் அதிமுகவுக்கு கிடைத்திருக்காது. எம்பி தேர்தலின்போதே வன்னியர்களை வாக்குகளை அள்ள அதிமுக பக்கா பிளானாகவே செயல்பட்டது.

  அதனால்தான் முதல் நபராக கூட்டணிக்குள் சேர்த்து 7+1 என்று வாரி தந்தது. அந்த +1 என்பதையும் ராஜ்ய சபா தேர்தலின்போது, அன்புமணிக்கு தந்து அழகுபார்த்தது. இதற்கு காரணம், இந்த இடைத்தேர்தலை அதிமுக கணக்கு பண்ணிதான். அதனால்தான் அதிமுகவுக்கு பாமக தனது நன்றிக்கடனாக இப்போது களத்தில் காட்டியது!

  நடிகர் விஜய் பயப்படக்கூடாது.. உறுதுணையாக இருப்பேன்.. சீமான் பேச்சு

   ராமதாஸ்

  ராமதாஸ்

  அதிமுக - திமுகவுக்கு இடையே நடக்கும் தேர்தல் என்பதை உடைத்து, திமுகவுக்கும் - பாமகவுக்கும் தேர்தல் என்று களத்தையே அசைத்தவர் டாக்டர் ராமதாஸ்தான்! இன்றைய வெற்றி பாமகவால் தான் கிடைத்திருக்கிறது என்பதை அதிமுகவும் மறுப்பதற்கில்லை. அதனால்தான், தமிழக முதல்வர் எடப்பாடியாரும் அமைச்சர் சிவி சண்முகமும் தேர்தல் ரிசல்ட் பார்த்த உடனேயே ராமதாசுக்கு போனை பண்ணி நன்றி சொல்லி உள்ளார்கள்.

  சிவி சண்முகம்

  இதைதான் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களும் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு உழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். நான் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

   உரசல்

  உரசல்

  இதில் இன்னொரு விஷயம் கவனிக்கத்தக்கது.. அமைச்சர் சிவி சண்முகம் ராமதாசுக்கு போன் செய்து பாராட்டி உள்ளார். உண்மையை சொல்ல போனால், சிவி சண்முகத்துக்கும், பாமகவுக்கும் கொஞ்சம் உரசல்தான். பாமகவுடன் கூட்டணி வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்ததும், பாமகவை கடுமையாக விமர்சித்தவர்களில் முக்கியமானவரும் சிவி சண்முகம்தான்.

   சாத்தியமில்லை

  சாத்தியமில்லை

  "ஊழல் பற்றி பேச பாமகவினருக்கு தகுதி இல்லை" என்று உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் பகிரங்கமாக விமர்சித்த இதே சிவி சண்முகத்திடம்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்?! எனினும் விழுப்புரத்தை தன்னை முழுசுமாக நம்பி ஒப்படைத்தவர் முதல்வர். எனினும், உள்ளுக்குள் இருக்கும் உரசல்களை தூக்கி தூரமாக போட்டுவிட்டு, கட்சிக்காக களம் இறங்கிய சிவி சண்முகம், டாக்டர் ராமதாஸ் இல்லாமல் இந்த தொகுதியின் வெற்றி சாத்தியமில்லை என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.

   பெருந்தன்மை

  பெருந்தன்மை

  அதனால்தான் இந்த இடைத்தேர்தலிலும் சரியாக பயன்படுத்திகொண்டு, அதற்கான நன்றியையும் போனில் தெரிவித்துள்ளார். இது டாக்டர் ராமதாஸ் மேல் சிவி சண்முகம் வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்தி உள்ளது.

  ஒட்டுமொத்த அதிமுக கூட்டணியின் வெற்றி இது என்று சொல்லி கொள்ளாமல், ராமதாசுக்கு போன் பண்ணி பேசியது, முதல்வரின் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

  இவர்கள் இருவரின் நன்றியையும் பெரிதாக காட்டி கொள்ளாமல், கூட்டணி தர்மத்தில் இதெல்லாம் சாதாரணப்பா என்று அசால்ட் காட்டி, அதிமுகவுக்கு வாழ்த்து சொல்லியது.. டாக்டர் ராமதாஸின் பெருந்தன்மையை வெளிப்படுத்தி உள்ளது!

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  nanguneri and vikkiravandi by election result: cm edapadi palanisamy and minister cv shanmugam thanked pmk founder dr ramadoss
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more