சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்குநேரியும் போச்சு.. விக்கிரவாண்டியும் காலி.. தக்க வைக்க முடியாத திமுக.. கூட்டணி என்னாகும்?

திமுகவின் கூட்டணி இனியும் தொடருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Vikravandi By Election Result | அதிமுக-விற்கு கை மாறிய விக்கிரவாண்டி-வீடியோ

    சென்னை: இடைத்தேர்தலில் திமுகவின் பின்னடைவு என்பது, அதன் கூட்டணி கட்சிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதுடன், அவற்றை ஆழமாக யோசிக்கவும் வைத்துள்ளது.

    "இது எங்க மண், நாங்கதான் நிற்போம்" என்று அடம்பிடித்து நாங்குநேரியை வாங்கியது காங்கிரஸ்.. ஆனால் இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக காங்கிரஸ் தலைவருக்கு மனசார இஷ்டம் இல்லை. எனினும் விலை போய்விட்டதாக சொல்வார்களே என்ற காரணத்துக்காகவே நாங்குநேரியை வலிய வந்து திமுகவிடம் கேட்டதாகவும் செய்திகள் வந்தன.

    வேறு வழியின்றி திமுகவும், தொகுதியை விட்டு தந்துவிட்டது. எப்போது ஸ்டாலின் இந்த தொகுதியை காங்கிரசுக்கு என்று அறிவித்தாரோ அப்போதே அடுத்தடுத்து பிரச்சனைகள் வெடித்து கிளம்பின. சீட் பஞ்சாயத்து, வேட்பாளர் அதிருப்தி, உள்ளடி வேலை, என்று ஏகப்பட்ட பூசல்கள் நாங்குநேரிக்குள் சிதறடித்து கொண்டிருந்தன.

    ஒரு தாக்கரே குடும்பம் செம ஹேப்பி.. இன்னொரு குடும்பம் பெரும் சோகம்.. சறுக்கிய ராஜ் தாக்கரே!ஒரு தாக்கரே குடும்பம் செம ஹேப்பி.. இன்னொரு குடும்பம் பெரும் சோகம்.. சறுக்கிய ராஜ் தாக்கரே!

    பெரிய மைனஸ்

    பெரிய மைனஸ்

    திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரச்சாரம் இங்கு நடந்தாலும், சீமான் ராஜீவ் காந்தி விஷயத்தை கொளுத்தி போட்டதை காங்கிரஸ் பிரச்சார யுக்தியாக இதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதுதான் பெரிய மைனஸ். அங்குதான் அது பெரிதாக சொதப்பி விட்டது. காங்கிரஸே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போனதால் மக்களும் காங்கிரஸ் மீது அனுதாபப்படவில்லை.

    தோல்வி

    தோல்வி

    இப்போது அடம் பிடித்து இந்த தொகுதியை வாங்கின காங்கிரஸ் மண்ணை கவ்வும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி அடம் பிடித்து வாங்கியும் தோற்றுள்ளதால் திமுக கடுப்பாகியுள்ளது. அதேசமயம், திமுக தரப்பிலிருந்து பெரிதாக உதவவில்லையே என்ற அதிருப்தியும் காங்கிரஸுக்கு உள்ளது. இது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது. எம்பி தேர்தலிலேயே 10 சீட்டை எடுத்த எடுப்பிலேயே தந்ததால், நிறைய அதிருப்திகளை திமுக சந்திக்க நேர்ந்த நிலையில், இப்போது இந்த இடைத்தேர்தலில் தோல்வியிலும் காங்கிரஸ் கூட்டணி கைவிட்டுவிட்டது பெரிய அதிர்ச்சிதான்.

    திருமாவளவன்

    திருமாவளவன்

    அதேபோல, விசிகவை பொறுத்தவரை, விக்கிரவாண்டியில் விசிகவின் பிரச்சாரம் குறைவாக தென்பட்டதாக ஒரு பேச்சு எழுந்தது. பொதுவாக வட தமிழகத்தில் பெரும்பான்மையாக இருப்பது வன்னியர் சமுதாயம்தான். அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் கணிசமான வாக்கு வங்கி உண்டு. ஆனால், திமுக கூட்டணியில் விசிகவை மனசார ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

    பின்னடைவு

    பின்னடைவு

    திமுக கூட்டணியில் விசிக உள்ளதால், இது வன்னியர் பெல்ட்டில் பின்னடைவைதான் ஏற்படுத்தும் என்பதை ஸ்டாலின் உணராமல் இல்லை. அதனாலேயே கடந்த எம்பி தேர்தலின்போதுகூட திருமாவளவனை எந்த பகுதிக்கும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காமல் தடுத்ததாகவும் செய்திகள் வந்தன.

    சலசலப்பு

    சலசலப்பு

    அவ்வளவு ஏன், திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியின் பல கிராமங்களின் சுவர்களில் பானை சின்னம் மட்டும்தான் வரையப்பட்டிருந்ததே தவிர, வேட்பாளர் பெயர், விசிக கொடி, எங்குமே தென்படவில்லை. இதனால் கடந்த முறையே விசிக தொண்டர்கள், தனியாகவே நின்றிருக்கலாமே என்று நொந்து கொண்டனர். இதே முணுமுணுப்பு இந்த முறையும் வெடித்து கிளம்பியது. ஆனால், திருமாவளவன் இரு தொகுதிகளுக்கும் வந்து பிரச்சாரம் செய்து சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு போனார்.

    கூட்டணி தொடருமா?

    கூட்டணி தொடருமா?

    இப்போது இந்த இடைத் தேர்தல் முடிவுகள் விசிக, காங்கிரஸை என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க வைக்க போகிறது என்று தெரியவில்லை. திமுகவுடனேயே விசிக தொடருமா? அல்லது காங்கிரஸை திமுக கழட்டி விடுமா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது. அனேகமாக உள்ளாட்சித் தேர்தலில் எல்லோரையும் கழற்றி விட்டு விட்டு தனியாக நிற்க திமுக முயலக் கூடும். அதை வைத்து பொதுத் தேர்தல் கூட்டணி உத்தியை அது எடுக்கலாம். மொத்தத்தில் இடைத் தேர்தல் முடிவு என்பது திமுகவுக்கு நிச்சயம் சறுக்கலே!

    English summary
    nanguneri and vikkiravandi by election result: It is doubtful whether the dmk-alliance will continue in local body election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X