சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டீங்களே.. இதுக்கு பேசாம வசந்தகுமாரே எம்எல்ஏவாக இருந்திருக்கலாம்..!

நாங்குநேரியில் காங்கிரஸ் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Vikravandi By Election Result | அதிமுக-விற்கு கை மாறிய விக்கிரவாண்டி-வீடியோ

    சென்னை: ஏன் இப்படி அடம் பிடிக்கணும்.. ஏன் இப்படி மண்ணை கவ்வணும்.. காங்கிரஸ் மண்ணிலேயே காங்கிரஸ் தோற்றுள்ளது ஒரு தேசிய கட்சிக்கு எவ்வளவு அவமானம்?

    வசந்தகுமார் தான் உண்டு தன் தொகுதி உண்டு ஜம்மென்று இருந்தார். காங்கிரசை வைத்து மத்த வேட்பாளருக்குதான் பலம் என்றால், வசந்தகுமார் இருப்பதாலேயே காங்கிரசுக்கு பலம் என்ற பெயர்தான் அவருக்கு எப்போதும் இருந்தது.. இப்போதும் இருக்கிறது.

    கண்ணை மூடிக்கொண்டு சீட் தந்துவிடுவார்கள்.. காரணம் பசை உள்ள பார்ட்டி.. ஒட்டுமொத்தமாக தேர்தல் நடந்து முடியும்வரை ஒரு பிரச்சனையும் இருக்காது.

     நாங்குநேரியில் 25 ஆயிரத்தை நெருங்கும் வாக்கு வித்தியாசம்.. வெற்றிக்கோட்டை நெருங்கியது அதிமுக நாங்குநேரியில் 25 ஆயிரத்தை நெருங்கும் வாக்கு வித்தியாசம்.. வெற்றிக்கோட்டை நெருங்கியது அதிமுக

    மரியாதை

    மரியாதை

    அப்படித்தான் நாங்குநேரியில் பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். இவர் மீது அந்த தொகுதி மக்களும் தனிப்பட்ட முறையில் மதிப்பு வைத்துள்ளார்கள். காரணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்மாய்களை சொந்த காசிலேயே தூர்வாரியவர் வசந்தகுமார். இதற்காகவே ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாங்கி வைத்துள்ளார்.

     எம்பி சீட்

    எம்பி சீட்

    ஆனால், இவரை இப்படியே விட்டிருந்தால் பரவாயில்லை.. இவருக்கு ஆசை வந்ததா, அல்லது காங்கிரசுக்கு ஆசை வந்ததா என்று தெரியவில்லை.. எம்எல்ஏவாக இருந்தவருக்கு எம்பி சீட் தரப்பட்டு.. அதில் வசந்தகுமார் வெற்றிபெற்றுவிட, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட.. கடைசியில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டது.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    ஆனால் துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள்.. காங்கிரஸ் நாங்குநேரியை தற்போது இழந்து விட்டது. பேசாமல் லோக்சபா தேர்தலில் வேறு ஒரு காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம். தேவையில்லாமல் ராஜினாமா செய்து அநியாயமாக ஒரு எம்எல்ஏ பதவியை காலி செய்துள்ளது காங்கிரஸ். இதுபோன்ற சூழல்களை தவிர்க்காமல் ஏன் இப்படி செய்தனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

     புரியாத புதிர்

    புரியாத புதிர்

    அப்படியே எம்பி தேர்தலில் தான் சீட் வாங்கி விட்டார்களே.. பேசாமல் நாங்குநேரியை திமுகவுக்காவது விட்டுத் தந்து ஒதுங்கி இருக்கலாம். இதிலயும் சீட் தர வேண்டும், இல்லையானால் தனித்துகூட போட்டியிடுவோம் என்ற சவால் விடும் ரேஞ்சுக்கு ஏன் காங்கிரஸ் அன்று கொக்கரித்தது என்று இன்றுவரை புரியவே இல்லை. ஒரு வேளை திமுக பக்கம் அலை அடிக்குது, அது கொஞ்சம் நம்ம பக்கமும் கண்டிப்பாக அடிக்கும் என்று காங்கிரஸ் தப்புக் கணக்கு போட்டு விட்டதா அல்லது பண பலத்தால் ஜெயித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டதா.. என்று தெரியவில்லை.

     ராஜினாமா

    ராஜினாமா

    ஆனால் ஒன்று மட்டும் உண்மை.. ஒரு பதவியில் இருப்பவர் அதை இன்னொரு உயர் பதவிக்காக ராஜினாமா செய்து விட்டுப் போனால் இதுதான் கதி என்று மக்கள் சரியான பாடத்தை கற்பித்துக் காட்டியுள்ளனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் வரிப்பணத்தை இப்படி தேவையில்லாமல் இடைத்தேர்தலுக்கு வீணடிக்கும் வேலைகளை அரசியல் கட்சிகள் இனியும் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தவிர்க்காவிட்டால் முடிவு என்னாகும் என்ற எச்சரிக்கையையும் இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தி உள்ளது.

    English summary
    nanguneri and vikkiravandi by election result: mp vasantha kumar should not have resigned
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X