சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலியான 56 சட்டசபை தொகுதிகள்...நாடு முழுவதும் இடைத்தேர்தல்... விரைவில் தேதி அறிவிப்பு!!

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் காலியாக இருக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதேபோல் பீகார் சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 56 சட்டசபை இடங்கள் காலியாக இருக்கின்றன. இத்துடன் காலியாக இருக்கும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலும் நடக்கவிருக்கிறது.

இடைத்தேர்தலுக்கான தேதிகள், எவ்வாறு தேர்தலை நடத்த வேண்டும் போன்றவை குறித்து விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஷெபாலி ஷரண் தெரிவித்துள்ளார்.

Sheyphali Sharan

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கேபிபி சாமி, குடியாத்தம் எம்.எல்.ஏ. எஸ். காத்தவராயன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக கடந்த பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் உயிரிழந்தனர். சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனா தொற்று பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்து இருந்தார்.

நாடு முழுவதும் 56 சட்டசபை தொகுதிகள், ஒரு லோக் சபா தொகுதி காலியாக இருக்கிறது. காலியாக இருக்கின்றன. மத்தியப்பிரதேசத்தில் 27 சட்டசபை தொகுதிகள், குஜராத்தில் 10 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 5 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 4 தொகுதிகள் காலியாக உள்ளன. இவை அனைத்துக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் தேர்தல் நடக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.

English summary
By-elections in Assembly and Parliamentary Constituencies will be announced later says Sheyphali Sharan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X