சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்- சத்யபிரதசாஹூ அறிவிப்பு- வீடியோ

    சென்னை: அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் உள்பட 4 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

    நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இதுவரை 127 கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக இந்திய தோ்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலிப் ஷர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்றுமுன் தினம் மாலை சென்னை வந்தனர்.

    தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட தயங்குவது ஏன்? தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட தயங்குவது ஏன்?

    ஆலோசனை

    ஆலோசனை

    சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பலத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரசியல் கட்சிகள்

    அரசியல் கட்சிகள்

    அப்போது தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறுகையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை மாற்ற அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    நியாயமான முறை

    நியாயமான முறை

    மக்களவை, இடைத்தேர்தல் நடக்கும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா குறித்த வழக்குகளை விசாரித்த விரைவு நீதிமன்றம் அமைக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நியாயமான முறையில் தேர்தலை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பதற்றமான வாக்குச் சாவடி

    பதற்றமான வாக்குச் சாவடி

    பறக்கும் படையினர் சோதனை என்ற பெயரில் சாதாரண மக்களை துன்புறுத்தக் கூடாது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் மத்திய போலீஸ் படையை நிறுத்த கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். சிறப்பு செலவின பார்வையாளர் ஒருவர் தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    4 தொகுதிகளுக்கு

    4 தொகுதிகளுக்கு

    ரபேல் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. சிவிஜில் ஆப்பை பதிவிறக்கம் செய்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம் என்றார் அசோக் லவாசா.

    புகார் அளிக்கலாம்

    புகார் அளிக்கலாம்

    ரபேல் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. சிவிஜில் ஆப்பை பதிவிறக்கம் செய்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம் என்றார் அசோக் லவாசா.

    English summary
    Byelection for Aravakkurichi and more 3 constituencies will be conducted soon, says Election commissioners.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X