சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கையில் பூச்சண்டு, கழுத்தில் மாலை, சிஏஏவை எதிர்த்த மாப்பிள்ளை.. தாம்பரம் போராட்ட களத்தில் கல்யாணம்

Google Oneindia Tamil News

சென்னை: தாம்பரத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்ட களத்தில் திருமணம் நடந்துள்ளது. இதனால் மணமக்களை சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிர்வதித்தனர்.

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்ஆர்சி மற்றும என்பிஆர் ஆகிவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தன்னிச்சையாக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது.

caa: a muslim couple married in anti-caa protest in chennai

சென்னையில வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடி போன்ற பகுதிகளில் 2 வாரங்களை கடந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பல்லாரவம் ஜாமியா மசூதியில் தொலுகை முடித்து வந்தவ இஸ்லாமியர்கள் 200 பேர் நேற்று திடீரென குதித்தனர்.

சட்டசபையில் சிஏஏ மற்றும் என்ஆர்சிகு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என நேற்று இரவு, இன்று அதிகாலை என தொடர்ந்து வரும் போராட்டம் இன்று பிற்பகலை தாண்டி தொடர்கிறது. அவர்கள் தொழுகைகள் செய்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

caa: a muslim couple married in anti-caa protest in chennai

இந்நிலையில் இன்று போராட்டம் நடந்து வரும் பல்லாரவத்தில் அதே பகுதியில் திருமண மண்டபத்தில் அபுதாகீர்-சல்மான் சுல்தான் ஆகிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

caa: a muslim couple married in anti-caa protest in chennai

அங்கிருந்த மணமகன் அபுதாகீர் போராட்டம் நடந்து வரும் இடத்திற்கு வந்தார். அங்கேயே திருமணம் பதிவு செய்து, திருமண தொலுகையை இஸ்லாமிய பெரியவர்கள் நடத்தினார்கள். மேலும் அங்கேயே பெற்றோர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆசீர்வாதம் செய்தனர். அதன்பிறகு தொடர்ந்து மணமகன் உள்பட அனைவரும் சிஏஏவுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி போராடி வருகிறார்கள். இதனிடையே சிஏஏவுக்கு எதிரான போராட்டக்களத்தில் திருமணம் நடைபெற்றது தாம்பரம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
a muslim couple married in anti caa protest in chennai pallavaram. Groom slogan against caa and nrc
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X