சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேட்டை திறந்து வாழ்வு தந்த தமிழகம்.. அதை மூடி முடிக்கவும் தயங்காது..ரஜினி மீது திமுக எம்பி பாய்ச்சல்

வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு எம்பி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    டிவிட்டரில் வைரலாகும் வீதிக்கு வாங்க ரஜினி| Trending hashtag against actor rajinikanth

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் கடுமையாக பாய்ந்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின்போது பெரும் தாக்குதல் நடந்துள்ளது.

    போராட்டம் நடத்திய பெண்களை ஆண் காவலர்கள் அடித்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், காவல்துறையினரின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த்தின் தலை உருள ஆரம்பித்துள்ளது. காரணம், இஸ்லாமியர்களுக்க ஏதாவது என்றால் முதலில் நான் குரல் கொடுப்பேன் என்று கூறியதுதான்.

    திமுகவைச் சேர்ந்த தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில் குமார் ரஜினி மீது கடுமையாக பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் சில டிவீட்டுகளைப் போட்டுள்ளார்.

    நீங்க சொன்னீங்களே

    இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன்- சொன்னது நீ தானா, சொல் சொல். எங்க @rajinikanth sir ஆள காணோம். Gateஅ திறந்து உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே gate அ மூடி, முடித்து வைக்கவும் தயங்காது என்று முதல் டிவீட்டில் கடுமையாக தாக்கியுள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து தமிழில் நடிகராக அறிமுகமான ரஜினியின் முதல் காட்சியே இரும்பு கேட்டை திறந்து உள்ளே வருவது போலத்தான். அதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளார் செந்தில் குமார்.

    ரஜினி ரசிகர்கள் பதிலடி

    அதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஓட்டு போடவில்லை , ஆனால் இணையத்தில் கபட நாடகம் எதற்கு? திமுக தூண்டுதலால் #இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன் என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை. திமுகவின் ஒரே கொள்கை இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.

    திமுகவின் பதிலடி

    இதற்கு திமுகவைச் சேர்ந்த பூபாலன் என்பவர் பதில் கொடுத்துள்ளார். நீங்கள்ளாம் நியூஸ் பாலோ பண்றீங்களா இல்லை பிஜேபி சொல்றதை மட்டும் பாலோ பண்றீங்களா. சிஏஏ சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களிக்கலைன்னு உங்களுக்கு யார் சொன்னா. அது பொய்யின்னு நான் நிரூபிச்சுட்டா தும்பை பூ செடியில் தூக்குப் போட்டுத் தொங்கிருங்க,மானம் கெட்டவனுகளா என்று காட்டமாக பதிலளித்துள்ளார் இவர்.

    திமுக அசைன்மென்ட்

    ராமச்சந்திரன் போட்டுள்ள ஒரு பதில் - பிரச்சனை என்னவோ அரசாங்க நடவடிக்கை ஆனால் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா அவர்கள் ரஜினி அவர்களின் முடிவைப் பற்றி பேசுகிறார்.... அரசியல் அருமை.. நான் அன்றே சொன்னேன் Special Assignment to Target Rajini sir. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்....என்று கூறியுள்ளார்.

    செந்தில் பதிலடி

    அதற்கு டாக்டர் செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஆமா தோழர் இரவு 12:00 மணிக்கு என்ன கூப்பிட்டு assignment குடுக்க போறாங்க. -அட நீங்க வேற. #போராட்டம் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாக மாறிவிடும்- சொன்னது யாரு. என்று ரஜினியை மீ ண்டும் கேள்வி கேட்டுள்ளார் செந்தில் குமார். ரஜினிக்கும் டேக் செய்துள்ளார்.

    மீண்டும் பதில்

    அதற்கு ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார் - போராட்டங்கள் தானாக நடப்பதற்கும் தூண்டிவிடப்பட்டு நடப்பதற்குமான வேறுபாடு உங்களுக்கு நன்கு தெரியும் ஆனால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய இடத்தில் நீங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்நாட்டின் இஸ்லாமியர்கள் அகதிகளாய் மாறுவார்கள் என்பது பொய் பிரச்சாரம் அதை வைத்து தான் போராட்டங்களே ஐயா..என்று அவர் குத்திக் காட்டியுள்ளார்.

    வாய் பேசியிருக்கக் கூடாது

    அதற்கு இப்படி ஒருவர் பதிலளித்துள்ளார். தன்னியல்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது! கோவை முதல் காரைக்கால் வரை! போயஸ் கார்டன்-வண்ணாரப்பேட்டை வரமுடியாதவர், அதிகம் வாய் பேசி இருக்கக்கூடாது என்று ரஜினிகாந்தை கண்டித்துள்ளார். மொத்தத்தில் ரஜினியை மீண்டும் ஒருமுறை கேட்டைத் திறந்து தெருவுக்கு வந்து பேட்டி கொடுக்கும் வகையில் இந்த டிவீட்டுகள் உள்ளன.

    ரஜினி வெளியே வருவாரா?

    English summary
    caa chennai vannarapettai protest issue: DMK MP senthilkumar condemns
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X