சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் தொப்பி அணியாத முஸ்லீம்ன்னு சொன்னீங்களே.. ஒரு அறிக்கை கூட இல்லயே ஐயா".. ட்விட்டர்வாசிகள் கேள்வி

வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவிக்கவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu

    சென்னை: "நான் தொப்பி அணியாத முஸ்லீம்ன்னு சொன்னீங்களே... வண்ணாரப்பேட்டையில் நடந்ததை கண்டித்து ஒரு அறிக்கை கூட இல்லயே ஐயா" என்று டாக்டர் ராமதாஸை ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. இதற்கு காரணம் தன் வீட்டு தோட்டத்தில் வளர்த்த பூக்களை போட்டோ எடுத்து ட்வீட்டர் பக்கத்தில் டாக்டர் பதிவிட்டதுதான்!

    பாமகவை பொறுத்தவரை குடியுரிமை திருத்தசட்டத்தை முழு மனதோடு ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுக் கொள்ளவில்லை.. ஆனால் ராஜ்யசபாவில் சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

    இது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் சொல்லும்போது, "கூட்டணி தர்மத்தை மதித்து ஆக வேண்டும். அதேசமயம், பாமகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை. நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை" என்றார். அதேபோல சென்னையில் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக நடத்திய பேரணியிலும் கலந்து கொள்ளால் பாமக கல்தா கொடுத்தது.

    ஜவாஹிருல்லா

    ஜவாஹிருல்லா

    இதனிடையே, தைலாபுரம் தோட்டத்திற்கு சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சில பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, குனங்குடி ஹனீபா போன்றோர் இதில் அடக்கம்... குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.

    முஸ்லிம்

    முஸ்லிம்

    அப்போது ராமதாஸ் அவர்களிடம் பேசும்போது, "நான் தொப்பி அணியாத ஒரு முஸ்லிம், உங்களில் ஒருவன்... உங்களை சிறுபான்மை என்று சொல்லிக்கொள்ளாதீர்கள். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு எல்லாம் இங்கு கிடையாது.. தமிழகத்தில் எல்லா உரிமைகளோடு நாம் வாழ்வோம்... அதற்கு எல்லா விதமான பாதுகாப்புகளையும் பாமக நிச்சயம் அளிக்கும். குடியுரிமை சட்டம் குறித்து நானும் கவனித்து வருகிறேன்" என்றார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் போராட்டத்தினால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.. முஸ்லீம் பெண்கள் மீது தாக்குதல் நடந்ததாக, திமுக தலைவர், நாம் தமிழர் கட்சி உட்பட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ் இதற்கு எந்த மாதிரியான எதிர்ப்பை பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.. அதன்படியே அவரை ட்விட்டரையும் நெட்டிசன்கள் ஆராய்ந்தனர்.. எதிர்பார்த்தபடியே ட்வீட் இருந்தது.

    பூக்கள்

    ஆனால், அதில் 2 பூக்கள் பூத்து கொண்டிருந்தன. "தைலாபுரம் தோட்டத்து மலர்கள்: 2. அடினியம் மலர்கள். வெள்ளை மற்றும் வண்ணத்தில்" என்று பதிவிட்டுள்ளர் டாக்டர்! நேற்று சட்டசபையில் பட்ஜெட் நடந்து கொண்டிருக்கும்போதே, அந்த அறிவிப்புகளை பாராட்டி ட்வீட்களை போட்டு வரவேற்றவர் டாக்டர் ராமதாஸ்.. ஆனால், விடிய விடிய போராட்டம் நடந்தும், அது சம்பந்தமான ட்வீட்கள் இல்லாதது ட்விட்டர்வாசிகளை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது. தங்கள் ஆதங்கத்தையும் ட்விட்டர்வாயிலாகவே வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    நிறம் மாறாமல் பூக்கட்டும்

    நிறம் மாறாமல் பூக்கட்டும்

    "தமிழகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் CAA -வுக்கு எதிரான போராட்டங்கள் பத்தி உங்க கருத்து என்னங்கய்யா" என்று ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். "வண்ணாரப்பேட்டை... இரத்தம் உறைதல்..." என்றும், "நான் தொப்பி அணியாத இஸ்லாமியன் என்று சொன்ன வண்ணாரப்பேட்டையில் நடைந்ததை கண்டித்து ஒரு அறிக்கை கூட இல்லயே மருத்துவரே" என்றும் உரிமையுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்... "அய்யாவைபோல் தேர்தலுக்கு தேர்தல் நிறம்மாறாமல் பூக்கட்டும்" என்று சில காட்டமான ட்வீட்களும் பதிவாகின்றன!

    நம்புவோம்

    நம்புவோம்

    பொதுவாக, தமிழகத்துக்கு ஒன்று என்றால், தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஓடோடி வருபவர் டாக்டர் ராமதாஸ்.. மத்திய அரசின் எத்தனையோ வெறுப்புவாத அரசியலை பகிரங்கமாக கேள்வி எழுப்பி சாடியவரும்கூட.. அந்த வகையில் நிச்சயம் வண்ணாரப்பேட்டை சம்பவத்துக்கும் காட்டமான குரலை எழுப்புவார் என்றே நம்புவோம்!

    English summary
    caa chennai vannarapettai protest issue: pmk founder DR ramadoss tweet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X