சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிகாந்த் அவர்களே, தடியடி நடத்தியது தெரியாதா.. கண்டிக்க துணிச்சல் இருக்கிறதா.. வன்னியரசு காட்டம்!

ரஜினிகாந்த்துக்கு வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    டிவிட்டரில் வைரலாகும் வீதிக்கு வாங்க ரஜினி| Trending hashtag against actor rajinikanth

    சென்னை: "இசுலாமியருக்கு பாதிப்பென்றால் சும்மா இருக்கமாட்டேன் என்று சொன்ன ரஜினிகாந்த் அவர்களே, நேற்றைய இரவு இசுலாமியர் மீது நடத்திய போலீஸ் தடியடி உங்களுக்கு தெரியாதா? போலீசை கண்டிக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    ரஜினிகாந்த் அன்று சிஏஏ சம்பந்தமாக பேட்டி அளித்தபோதே தன் கருத்தை பகிரங்கமாக எடுத்து சொன்னவர் வன்னியரசு.. "இதற்கு முன்பு இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டபோது, ரஜினிகாந்த் குரல் கொடுத்த எந்த ஒரு முன்மாதிரியும் அவரிடம் நாம் பார்த்ததில்லை.

    ரஜினிகாந்த்தின் குரல் என்பது மோடி, அமித்ஷா, பாஜகவின் குரல்.. ஆர்எஸ்எஸ்-ன் குரல்... ஆர்எஸ்எஸ், பாஜகவை தவிர வேறு யாரும் சிஏஏவை ஆதரிக்கவில்லை.. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ்காரராக ரஜினி செயல்பட்டு வருகிறார்.. அவரது பார்வை ஆளும் வர்க்கத்தின், அதிகார வர்க்கத்தின் பார்வையாக உள்ளது.. " என்று ஆணித்தரமாக எடுத்து கூறியவர் வன்னியரசு.

    சென்னை மெரினா புரட்சியை நினைப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன?சென்னை மெரினா புரட்சியை நினைப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன?

    கைது

    கைது

    இப்போது, சென்னை வண்ணாரப்பேட்டையில் கலவர சம்பவம் வெடித்துள்ளது.. போராட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.. இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. தமிழகம் முழுக்க இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.

    ட்வீட்கள்

    இந்த சம்பவம் குறித்து வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.. அத்துடன் நடிகர் ரஜினிகாந்த்தையும் கேள்வி எழுப்பி உள்ளார்.. இது சம்பந்தமான ட்வீட் பதிவுகளில் அவர் தெரிவித்துள்ளதாவது: "குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்துக்குள் புகுந்து தடியடி நடத்தியுள்ளது... சனநாயகப்பூர்வமாக நடந்த போராட்டத்தை சீர்குலைத்து அச்சுறுத்தும் போக்கை காவல்துறை கைவிட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    "#CAA_NRC_NPR க்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்- ஒருவர் உயிரிழப்பு.. வன்முறையை ஏவிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். #NPR மேற்கொள்ளமாட்டோம் என நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்" என்றும் வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

    துணிச்சல் உள்ளதா?

    துணிச்சல் உள்ளதா?

    மேலும் குடியுரிமை பறிப்பு சட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது தடியடி, பலர் படுகாயம் அதிமுக அரசா? RSS அரசா? என்றும், இசுலாமியருக்கு பாதிப்பென்றால் சும்மா இருக்கமாட்டேன் என்று சொன்ன ரஜினிகாந்த் அவர்களே, நேற்றைய இரவு இசுலாமியர் மீது நடத்திய போலீஸ் தடியடி உங்களுக்குத்தெரியாதா? போலீசை கண்டிக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?" என்று காட்டமாக கேள்வியை எழுப்பி உள்ளார்.

    ஏற்கனவே "வீதிக்கு வாங்க ரஜினி" என்று ஹேஷ்டேக்குகள் சோஷியல் மீடியாவை பரபரப்பாக்கி வரும் நிலையில், வன்னியரசுவின் ட்வீட்கள் மேலும் சூடேற்றி வருகிறது!!!

    English summary
    caa chennai vannarapettai protest issue: vck vanni arasu condemns
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X