• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜஸ்ட் அப்பதான் ஸ்டாலின் அறிவித்தார்.. உடனே அறிவிப்பு.. கூடியது அமைச்சரவை.. திரும்புகிறது வரலாறு..!

Google Oneindia Tamil News

சென்னை இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..அத்துடன் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.. அந்த வகையில் அமைச்சரவை இப்போது கூடி உள்ளது.

  சட்டப்பேரவை நிகழ்வுகள் 24-06-2021

  இன்று 3வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது.. இந்த 3 நாட்களுமே சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதமும் நடந்தது... அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்களும் பதில் சொன்னார்கள்.

  இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டார்.. ஆனால் எல்லாவற்றிற்கும் திமுக அரசு பொறுமையாகவும், புள்ளிவிவரங்களுடனும், தெளிவாகவும் பதில் சொன்னது.

   அறிவிப்பு

  அறிவிப்பு

  இந்நிலையில், இன்று ஸ்டாலின் பேசும்போது ஒருமுக்கியமான வரிகளை கூறினார்.. ஆளுநர்உரை ட்ரெயிலர்தான்.. அரசின் ஐந்தாண்டு திட்டங்கள் கொள்கைகள், நோக்கங்கள் என்ன என்பதையெல்லாம் ஒரேயடியாக ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது..

   ஜஸ்ட் டிரைலர்

  ஜஸ்ட் டிரைலர்

  ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்த 3 நாட்களுமே ஆளுநர் உரை பலன் தரவில்லை.. வெறும் ஸ்டாலினை புகழ்ந்தே இருக்கிறது என்று பல கட்சி தலைவர்கள் கருத்து சொல்லி வரும்போது, ஜஸ்ட் டிரைலர் என்று ஸ்டாலின் சொல்லி, மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகளுக்கு உருவாக்கி உள்ளார்.

   ஆலோசனை

  ஆலோசனை

  இப்படிப்பட்ட சூழலில்தான், சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது.. ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டாலும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்ற முக்கிய தகவலும் வெளியானது.

   ஆளுநர் உரை

  ஆளுநர் உரை

  செய்யாறு, திண்டிவனத்தில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும்.. 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில், 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று முதல்வர் இன்று உரை நிகழ்த்திய நிலையில், அதற்கான முன்னெடுப்புகளும், அறிவிப்புகளும்கூட இன்றே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

   தொழிற்சாலைகள்

  தொழிற்சாலைகள்

  அதுமட்டுமல்ல, அண்ணா, காமராஜருக்கு பிறகு, இன்று தமிழ்நாட்டில் உள்ள பல தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியதே கருணாநிதிதான்.. அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் மூன்றாவது தலைசிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கியதும் திமுக ஆட்சிக்காலத்தில்தான்.. அதேபோல, பெரும் தொழிலுக்கு சமமாக சிறு மற்றும் குறு தொழில்கள் வளர்ச்சிக்கும் அன்றைய திமுக அரசுதான், மிகப் பெரிய முக்கியத்துவமும் நிதி உதவியும் வழங்கியது.

  முக்கியத்துவம்

  முக்கியத்துவம்

  மூடிக்கிடந்த பஞ்சாலைகளை திறப்பதற்கு முயற்சி செய்து வெற்றி கண்டது முதல், இன்று சென்னையில் தொழில்நுட்பத்தோடு விளங்கக்கூடிய பல தொழிற்சாலைகளும் திமுக அரசு காலத்திலேயே உருவானவை.. அந்த வகையில், தொழிற்சாலைகளையும், திமுக அரசையும் பிரித்து பார்க்க முடியாது.. சட்டசபையில் இன்றே 2 தொழிற்சாலைகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு, அதுதொடர்பாக இன்றே அமைச்சர்களுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளது, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

  English summary
  Cabinet meeting at 6 PM chaired by First Minister
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X