• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒரே மாதிரி.. ஒரே ஒரு போட்டோ.. ஆயிரம் அர்த்தம் சொல்லுதே.. முருகனுக்கு என்ன ஒரு பெருமிதம்!

Google Oneindia Tamil News

சென்னை: எல்.முருகன் டிவிட்டர் புரொபைல் போட்டோ மாத்தியிருக்கிறார்.. அவரும், பிரதமர் மோடியும் சேர்ந்து நின்று எடுத்து கொண்ட போட்டோ.. இதுதான் இன்னைக்கு முழுக்க ஹாட் நியூஸ்..!

பாஜகவில் மட்டுமல்ல, அதிமுக, பாமக, என மொத்த பேரும் அதிர்ந்து போய் கிடக்கிறார்கள்.. முருகனுக்கு மட்டும் எப்படி மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது என்று?

அதிமுகவில் தம்பிதுரை, ஓபி ரவீந்திரநாத், இவர்கள் 2 பேருமே கிட்டத்தட்ட 3 வருஷமாகவே டெல்லியில் மத்திய அமைச்சர் பதவிக்காக காத்து கிடந்தனர்.. அன்புமணி அங்கேயே கொஞ்ச நாள் தலைநகரிலேயே காத்திருந்தார்.. இதற்கு நடுவில் சுதீஷ் அப்பப்போ டெல்லி சென்றுவிட்டு வந்தார்.. ஆனால், எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை.

அடிச்சது சான்ஸ்.. எல். முருகன் மத்திய அமைச்சராகிறார்.. ஓபி ரவீந்திரநாத்துக்கு ஏமாற்றம்!அடிச்சது சான்ஸ்.. எல். முருகன் மத்திய அமைச்சராகிறார்.. ஓபி ரவீந்திரநாத்துக்கு ஏமாற்றம்!

பாஜக

பாஜக

முருகனுக்கு அடிச்சது ஜாக்பாட்.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது.. ஒன்று, முருகன் இந்த ஒரு வருடமாகவே தமிழ்நாட்டு பாஜகவை வளர்ப்பதற்கு எடுத்து கொண்ட முயற்சிகள்.. என்னதான் ஆயிரம் குறைகளை தமிழக பாஜக மீது, பல கட்சிகள் அள்ளி தெளித்தாலும், முதல்முறையாக 4 பேரை எம்எல்ஏவாக்கி சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை தமிழிசைகூட செய்யவில்லை.. ஆனால், பாஜகவுக்கான விதையை தமிழகத்தில் தமிழிசைதான் தூவினார் என்பதை நன்றியுடன் அந்த கட்சியினரே நினைத்து பார்க்க வேண்டும்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

20 வருஷம் கழித்து பாஜகவுக்கான அங்கீகாரத்தை எல்.முருகன் ஏற்படுத்தி தந்துள்ளார்.. இதுதான் பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் ரொம்பவே நெகிழ வைத்துவிட்டது.. இந்த நியமனத்துக்கு மற்றொரு காரணம், கொங்குவை குறி வைத்துள்ளது பாஜக தலைமை.. கொங்குவை தூக்கிவிட்டால், கிட்டத்தட்ட பாதி தமிழகத்தில் கால் ஊன்றியது போலஒரு பலம் கிடைக்கும் என்பதே அதன் நம்பிக்கை.. அதனால் வரப்போகும் தேர்தல்களை கணக்கில் கொண்டும், திமுகவுக்கு ஒரு செக் வைக்க வேண்டும் என்பதற்காகவுமே, கொங்குவை சேர்ந்த முருகனை பொறுப்பில் உட்கார வைத்துள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

ஆனால், முருகன் மட்டும் அங்கேயே தங்கிவிட்டார்.. அப்போதுதான் இவருக்கு ஒருவேளை பதவி இருக்க வாய்ப்பிருக்குமோ என்று ஒரு சந்தேகம் வந்தது.. ஆனால் முருகனை அங்கேயே தங்கும்படி சொன்னது அமித்ஷாதானாம்.. அப்படியானால், ஏற்கனவே அங்கேயே தங்கியுள்ள தம்பிதுரைக்கு சான்ஸ் கிடைக்காதோ என்ற சந்தேகமும் சேர்ந்து வலுத்தது. இறுதியில் முருகன் தேர்வாகி உள்ளார்..

முருகன்

முருகன்

முருகனும் டெல்லிக்கு மிகவும் விசுவாசமானவர்.. இந்த ஒரு வருடத்தில் முருகன் செல்லுமிடமெல்லாம் மோடி, அமித்ஷா புகழாரம்தான்.. ஒருமுறை முருகன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "அமித்ஷா சென்னைக்கு வர போகிறார்.. அவர் எங்கு எல்லாம் செல்கிறாரோ அந்த இடமெல்லாம், பாஜக வெற்றி பெற்றுள்ளது... அதனால்தான் அமித்ஷா என்றாலே எதிர்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிடுகிறது, கலங்கி போகிறார்கள்" என்றார்.

கவனம்

கவனம்

டெல்லி மேலிடம் எப்போதுமே தன்தரப்பு புகழ்ச்சியை மட்டும் எண்ணி பார்க்காது.. இறங்கி வேலை செய்யும் நபர்கள் மற்றும் விசுவாசத்துக்குரியவர்களைதான் உற்று நோக்கும்.. அவைகளை கணக்கில் கொள்ளும்.. அப்படித்தான் முருகனுக்கு இந்த சான்ஸ் அடித்துள்ளது.. சூட்டோடு சூடாக ட்விட்டரில் ஒரு போட்டோ போட்டுள்ளார் முருகன்.. அதில், பிரதமரும், முருகனும் பக்கத்தில் பக்கத்தில் நெருக்கமாக நின்றிருக்கிறார்கள்.. 2 பேருமே ஒரே மாதிரி போஸ் தந்துள்ளனர்.

  கொங்குவை குறிவைக்கும் BJP.. சீனியர்களுக்கு மத்தியில் Annamalai தலைவரானது எப்படி?
  வாழ்த்து

  வாழ்த்து

  இந்த போட்டோவுக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.. இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் சார் என்று வாய் நிறைய பாராட்டுக்களை ட்விட்டர்வாசிகள் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து நிற்பதுவே "ஆயிரம் அர்த்தங்களை" சொல்கிறதே...!

  English summary
  Cabinet Minister L Murugans Profile photo, goes viral on socials now
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X