சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறைந்த கருணாநிதியின் படத்துக்கு "மாலை அணிவிக்காத" தொண்டர்கள்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Flashback: Karunanidhi : முதல்வர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்த கருணாநிதி- வீடியோ

    சென்னை: கருணாநிதி இன்னும் மறையவில்லை. அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதால் அவரது படத்துக்கு நாங்கள் மாலை அணிவிப்பதில்லை என தொண்டர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

    கருணாநிதி என்ற ஒரு ஆளுமை தன் காந்தக் குரலால் அரை நூற்றாண்டு அரசியல் களத்தை கட்டி போட்டது. எழுத்து, இலக்கியம், கதை, திரைக்கதை, அரசியல் என பன்முகத் திறமை கொண்டவர் கருணாநிதி.

    சூரியன் உதயமாவதற்கு முன்பே எழும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. காலை எழுந்தவுடன் அத்தனை செய்தித்தாள்களை படித்து முடித்துவிடுவார். அதில் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் இருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு அதை தீர்க்க துரிதமாக நடவடிக்கை எடுப்பார்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    அரசியலில் அத்தனை நுணுக்கங்களிலும் டாக்டரேட் பட்டத்துக்கு மேல் ஒரு பட்டம் என ஒன்றிருந்தால் அதை பெற்றவர், அவருக்கு நிகர் அவரே. இவர் உயிருடன் இருக்கும் வரை தமிழகத்தில் எந்த ஒரு மத்திய அரசின் திட்டங்களும் திணிக்கப்படவில்லை.

    உடல்நிலை

    உடல்நிலை

    மக்களை பாதிக்கும் அத்தனை திட்டங்களையும் எதிர்த்து குரல் கொடுத்தவர். தனக்கே உரிய நகைச்சுவை கலந்து பாணியில் செய்தியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பதில் அளித்தவர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    மரணம்

    மரணம்

    இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்தார். இறுதி மூச்சு உள்ளவரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று திடமாக இருந்தவர். தனக்கு ஓய்வு என்பது மரணத்தில் மட்டும் தான் என்பதில் உறுதியாக இருந்தவர்.

    சந்தன பேழை

    சந்தன பேழை

    அதனால் தான் தனது கல்லறையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இந்த வாக்கியம் தான் கலைஞர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட இருக்கும் சந்தனப் பேழையில் பொறிக்கப்பட்டுள்ளது.

    உள்ளங்கள்

    உள்ளங்கள்

    இன்றைய தினம் அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் கூறுகையில் எங்கள் தலைவர் எங்கே மறைந்துவிட்டார். அவர் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    அணிவிப்பதில்லை

    அணிவிப்பதில்லை

    சூரியன் ஏதுங்க மறைவு. அவர் உடல்தான் சற்று ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது. ஆனால் அவரது உள்ளம் தமிழக மக்களின் நலன்கள் குறித்த நினைவுகளில் உள்ளது. இதனால் நாங்கள் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்தாலும் அவரது புகைப்படத்துக்கு நாங்கள் மாலை அணிவிப்பதில்லை என்கின்றனர் தொண்டர்கள்.

    English summary
    Cadres are not putting garland for Karunanidhi's photo as they believe he is still alive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X