சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அக்கா ரேவதிக்காக.. தம்பி முகிலன் பிரச்சாரம்.. வைரலாகும் புகைப்படம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    TN By Election: அக்காவுக்காக தம்பி முகிலன் பிரச்சாரம்... நாம் தமிழரின் மாற்று பிரச்சாரம்- வீடியோ

    சென்னை: மத்த கட்சியை போல இல்லை நாம் தமிழர் கட்சி. இந்த கட்சியில மட்டும்தான் சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரை பேச ஆரம்பிச்சிட்டாங்க!

    எந்த கட்சிக்குமே, இளைஞர், மகளிர் என தனித்தனி பாசறைகள் உண்டு. அப்படிதான் நாம் தமிழர் கட்சிக்கும் உள்ளது. இங்க ஒருபடி மேல போய் மழலையர் பாசறை என்று உள்ளது. (இது குழந்தைத் தொழிலாளர் முறையில் வந்து சேராதா என்ற விமர்சனங்களும் ஒரு பக்கம் குவிந்து வருகின்றன)

    Campaign for Naam Tamilar Party Candidate Revathi in Thiruparankundram

    பேருக்குதான் மழலை.. இவர்கள் பேசின வீடியோவெல்லாம் பார்த்தால் வாயைதான் பிளக்க தோன்றுகிறது. செல்போன், பப்ஜி என்று மட்டும் பிள்ளைகள் இல்லை.. நாட்டு நடப்புகளையும் தெரிந்து வைத்து கொண்டு அக்குவேறு ஆணி வேறாக எடுத்து வைத்து பேசுகிறார்கள் என்பதும் புரியும்!

    போலி பேரன் கமலுக்கு.. காந்தியின் ஒரிஜினல் கொள்ளு பேரன் எழுதியதாக.. எச். ராஜா போட்ட டிவீட்! போலி பேரன் கமலுக்கு.. காந்தியின் ஒரிஜினல் கொள்ளு பேரன் எழுதியதாக.. எச். ராஜா போட்ட டிவீட்!

    வெறும் பேச்சாக இல்லாமல், இந்த மழலையர்கள் குட்டி (பிரச்சார) பீரங்கிகளாகவும் உருமாறி வருகிறார்கள். 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இதில் திருப்பரங்குன்றம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து மழலையர் பாசறையை சேர்ந்த முகிலன் என்ற சிறுவன் வாக்கு சேகரித்துள்ளான்.

    கட்சியின் துண்டினை கழுத்தில் போட்டுக் கொண்டு மைக்கை பிடித்து அக்கா ரேவதிக்காக தம்பி முகிலன் வாக்கு சேகரித்தது அனைவரையும் ஈர்த்தது.

    எனினும் இதுவும் இணையத்தில் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது. அடுத்த தலைமுறைக்கான அரசியல் என்றும், இது குழந்தை தொழில்ல வராதா? என்றும் ட்வீட்கள் வந்தவண்ணம் உள்ளன. எதுவா இருந்தாலும் சரி.. படிக்கும்போது கரெக்டா படிச்சுருங்கடா குட்டிப் பசங்களா.. கல்வி முக்கியம்.!

    English summary
    Naam Tamilar Party Mazhalaiyar Pasarai campaign for Thiruparankundram Candidate Revathi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X