"முடிஞ்சதாமே".. இந்த 4 கட்சிகளுடன் பாஜக கூட்டணி?.. அதுவும் ஒரே சின்னத்தில்.. எகிறியடிக்கும் காந்தராஜ்
சென்னை: தமிழக பாஜகவுடன் 4 கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன என்றும், அந்த 4 காட்சிகளுக்கும் ஒரே சின்னத்தில் நிற்க போகின்றன என்று அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
ஆளும் திமுகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலையும் அப்போது வாசித்திருக்கிறார்.
நவீன நாகராஜ சோழன் எம்எல்ஏ? எடப்பாடிக்கு கேட் போட பாஜகவுடன் சேரும் டிடிவி தினகரன்! கணிப்பு பலிக்குமா?

ஸ்பெஷல்ஸ்
அரசியல்ரீதியாகவும் இந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. மற்றொருபுறம், சிறந்த ஆளுநர் என்று எடப்பாடி பழனிசாமி பாராட்டி இருந்ததும், அரசியல் களத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. இது தொடர்பாக பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.. நேற்றுக்கூட நம் ஒன் இந்தியா தமிழுக்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜ் ஒரு ஸ்பெஷல் பேட்டி தந்திருந்தார்..

பாராட்டு பத்திரம்
அதில், "ஆளுநரை கண்டிக்க வேண்டிய இடத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கே பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் என்றால், இவரும் பாஜகதானே? அதிமுகவின் பழனிசாமி, சங்கி பழனிசாமியாகவே மாறிவிட்டார்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக கேள்வி எழுப்பி காட்டமாக விமர்சித்துள்ளார்.. ஒரு பிரபல சேனலுக்கு காந்த ராஜ் பேட்டி தந்துள்ளார்.. அதில், தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக எப்படி இருக்க போகிறது என்ற தன்னுடைய அனுமானத்தையும் கூறியுள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

ஓவர் முனகல்
"நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமி தனியாக புலம்ப ஆரம்பிச்சிட்டார்.. காரணம் என்னவென்றால், பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த ஆதரவு தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும், ஏக்கமும்தான்.. இது கொஞ்சம் ஓவராயிடுச்சு.. எவ்வளவுதான் உங்களிடம் பணிந்து போனாலும், மதிக்கவே மாட்டேங்கறீங்களே, கடைக்கண் காட்டி பார்க்கக்கூட மாட்டேங்கறீங்களே? என்ற ஆதங்கத்தில் சமீப காலமாகவே புலம்ப ஆரம்பித்துவிட்டார்.. இந்த விஷயத்தை கவர்னர் ரவி, டெல்லிக்கு போய் சொல்லி உள்ளார்..

ப்ளான் A
உடனே, அமித்ஷா எடப்பாடியை கூப்பிட்டு, "பழனிசாமி, என்னை பார்க்க முடியலேன்னாலும் பரவாயில்லை, போய் கவர்னரை பார்த்து பேசிவிட்டு வாங்க, கவர்னரை பார்த்தால், என்னை பார்த்த மாதிரிதான்" என்று சொல்லி இருக்கிறார் உடனே இவரும் போய் கவர்னரை பார்த்துள்ளார்.. ஒருவரை பார்க்க நாம் யார் வீட்டுக்காவது போனால் வெறுங்கையுடன் போக மாட்டோம்.. கையில் சாத்துக்குடி, ஆப்பிள் எல்லாம் வாங்கிட்டு போய் பார்ப்போம் இல்லையா, அது மாதிரி, வெறுங்கையுடன் எப்படி போய் ஆளுநரை பார்ப்பது என்று நினைத்து, திமுக மீது ஊழல் புகார்களை கொண்டு போய் அங்கே தந்திருக்கிறார்.. அவ்வளவுதான்..

ப்ளான் B
அங்கே போய் அத்தனை ஊழலை எடப்பாடி சொல்லியிருக்காரே, அதில் பாதி ஊழல் இவர் ஆட்சி காலத்தில் நடந்ததுதான்.. பழனிசாமிக்கிட்ட ஒரு பிரச்சனை என்னவென்றால், எந்த குற்றச்சாட்டை இவர் சொன்னாலும், அந்த குற்றச்சாட்டை இவர் ஏற்கனவே செய்திருக்கிறார் என்பது தெரிந்துவிடுகிறது.. திமுக போட்ட ரோடு, பாலம் பற்றி பேசுகிறாரே, இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதானே, செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தது? 500 பேர் இறந்து போயிட்டாங்களே? அதுக்கப்பறம்கூட அந்த செம்பரம்பாக்கம் ஏரியை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணமே, கடந்த ஆட்சியில் இவங்களுக்கு வரவில்லையே? திமுக வந்த பிறகுதானே, அந்த வேலையெல்லாம் இப்போது நடந்து வருகிறது..

மிஸ்டேக் 1
வரலாறு காணாத மழை இப்போது பெய்தது.. பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையே.. தமிழகத்தில் மக்கள் நடமாட முடியவில்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக சொல்கிறாரே, அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டியதுதானே.. மாநில அரசின் சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருப்பதே பாஜகதானே.. இதற்கு மத்திய அரசுதான் பதில் சொல்லணும்.. இந்த ஒன்றரை வருடமாக, எதிர்க்கட்சி தலைவராக இருந்துக் கொண்டு, ஆனந்தமாக சம்பளம் வாங்கி கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்முறையாக, ஒரு கவர்னரிடம் சென்று மக்கள் குறையை பற்றி பேசியுள்ளார்.. இது ஒரு நல்ல மாற்றம்..

மிஸ்டேக் 2
ஆளுநரின் பணி, ஆளுநரின் செயல்பாடு பழனிசாமிக்கு பிடித்திருக்கிறது.. சனாதனம்தான் என்கிறார் ஆளுநர்.. அப்படியானால், அந்த சனானத்தை எடப்பாடியும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றே அர்த்தம்.. வள்ளுவர் காவி நிற உடை அணிந்திருந்ததாக ஆளுநர் சொன்னார்.. இதையும் எடப்பாடி ஏற்கிறார் என்றே அர்த்தம். இந்து மதத்தை ஏற்றுக்கொண்டுதான், சனாதனத்தையும் ஏற்றுக்கொண்டு, வள்ளுவர் குறள்களை பாடினார் என்று ஆளுநர் சொல்கிறார்.. அப்படியானால் இதையும் எடப்பாடி ஏற்றுக் கொண்டார் என்றே அர்த்தம்..

தலைக்கு மேல் கத்தி
எடப்பாடிக்கு பிரச்சனையே, அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.. நான்தான் பொதுச்செயலாளர் என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கிறார்.. பேசாமலும் இருக்க முடியவில்லை.. பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.. விட்டால் அரசியலையே விட்டு போயிடுவார் என்பதுதான் அவரது நிலைமை.. இப்போது அவர் அரசியலில் நீடிக்க காரணமே, ரெய்டு எதுவும் தன்மீது பாயாமல் இருக்க வேண்டும், பதவி ஏதாவது இருந்தால் நமக்கு அது பாதுகாப்பு என்று நினைக்கிறார்.

நால்வர் அணி
போகிற போக்கை பார்த்தால் அப்படி நடக்கும் போல.. ஏனென்றால், தினகரன், சசிகலா, ஓபிஎஸ்ஸைதான், எடப்பாடி சேர்த்து கொள்ள மாட்டேன் எனறு சொல்லிவிட்டாரே... அதனால், இவர்கள் எல்லாம் ஒவ்வொரு கட்சியாக நின்று, பாஜகவுடன் கூட்டணி வைத்தால், இதற்கு எடப்பாடியால் மறுப்பும் எதிர்ப்பும் சொல்ல முடியாது.. எப்படி கம்யூனிஸ்ட்கள் இடது, வலது என்று இருக்கிறார்களோ, அதுமாதிரி, எடப்பாடி அதிமுக பன்னீர்செல்வம் அதிமுக, சசிகலா அதிமுக, தினகரன் அதிமுக இப்படி பிரிந்து 4 கட்சியாக இணைத்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவித்து இரட்டை இலையை தருவாங்க..

4 + 4 பிரிவு
ரெய்டுகள் ஏதாவது தங்கள் மீது வந்தால், பழனிசாமி தங்களை காப்பாற்றிவிடுவார் என்பதால்தான் அவருடன் பலர் ஒட்டிக கொண்டுள்ளனர்.. அந்த நம்பிக்கை போய்விட்டால், எல்லாருமே அவரை விட்டு போய்விடுவார்கள்.. பாஜகவை முறைத்துக் கொண்டதன் மூலமாக அந்த நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்.. அதிமுக 4 ஆக பிரிந்து விட்டது.. 4 கட்சியாகிவிட்டது.. அந்த 4 கட்சியையும் இணைத்து கொள்வதுதான் மெகா கூட்டணி என்று பெயர்.. பழனிசாமியுடன் கூட்டணி, பன்னீர்செல்வத்துடன் கூட்டணி, சசிகலாவுடன் கூட்டணி, தினகரனுடன் கூட்டணி என 4 கட்சிகளுடனும் பாஜக கூட்டணி வைக்கும்.. இவர்கள் அனைவருக்கும் பொதுவான சின்னமாக இரட்டை இலை கொடுக்கப்படும் என்று பாஜக அறிவிக்கும்..

அபிப்பிராயங்கள்
ஆளுநரை அடிக்கடி சென்று எடப்பாடி சந்தித்து வருகிறார்.. ஆனால், கோர்ட்டிலேயே சொல்லிட்டாங்களே, ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை.. ஒரு ஃபைலை நிறுத்தி வைக்க ஆளுநரால் முடியாது.. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அபிப்பிராயங்கள் சொல்லவும் முடியாது.. ஆளுநரால் எதுவுமே செய்ய முடியாது.. மாநில அரசு தரும் ஃபைல்களை, ஒன்றிய அரசிடம் கொண்டு போய் தரும் வேலைதான் இவருடையது.. அதை பற்றி அபிப்பிராயம் கேட்கக்கூட இவருக்கு உரிமை இல்லை.. ஸ்டாம்ப் சரியாக ஒட்டவில்லை, கவரை ஏன் ஒழுங்காக போடவில்லை என்று வேண்டுமானால் இவர் கேட்கலாமே தவிர, உள்ளே இருக்கும் விஷயத்தை பற்றி, பேசக்கூட முடியாது..

ஃபைல்கள்
மேலிடத்தில் இருந்து, ஃபைல்களை இங்கே அனுப்ப வேண்டாம் என்றால், அனுப்பாமல் இருப்பார்.. அனுப்புங்கள் என்றால் அனுப்பி வைப்பார்.. ஒரு ஃபைலை 2 முறைதான் அவரால் நிராகரிக்க முடியும்.. 2 முறைக்கு மேல் என்றால், அந்த தீர்மானங்கள் அனுப்பப்பட்டதாக கருதி, அதுகுறித்த நடவடிக்கையையும் மாநில அரசே எடுத்துவிடும். இதுதான் சட்டம்.. ஜனாதிபதிக்கும் இதே நிலைமைதான்.. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை 2 முறைதான் திருப்பி அனுப்ப முடியும்.. 3வது முறை அனுப்ப முடியாது.. அதுக்குப்பிறகு, ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமலேயே அந்த சட்டம் நிறைவேறியதாக கருதப்படும்.

ரஜினிகாந்த்
ரஜினி குரல் கொடுப்பார் என்று பாஜக சொல்கிறது.. கடைசியில் ரஜினியை இவங்க ஏதோ கஷ்டத்தில் கொண்டு போக போகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. ரஜினி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. ரஜினி ரசிகர்களுக்கும் நாமும் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லிடணும்.. ரஜினியை ஏதோ வம்பில் கொண்டு போய் விட போறாங்க, உங்கள் தலைவனை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்று நாம்தான் அவங்களை அலர்ட் செய்யணும்" என்றார்.