கோடியில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த போட்டோவில் உள்ள உருவத்தை கண்டுபிடிங்க.. ஒரு பிரபலம்
சென்னை: இந்த செய்தியில் உள்ள போட்டோவில் மறைந்து இருக்கும் உருவத்தை முடிந்தால் கண்டுபிடிங்க பார்ப்போம்!
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்றாலே பொதுவாக மக்களை போட்டு குழப்பி எடுக்கும். அது என்ன ஆப்டிக்கல் இல்யூஷன் என்று கேட்கிறீர்களா?
மனிதனா? பறவையா? இந்த போட்டோவில் என்ன தெரியுது? உங்கள் காதல் வாழ்க்கை பற்றி ஈஸியா சொல்லிடலாம்!
ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் மாயையான படங்கள் என்று சொல்லலாம். உதாரணமாக ஒரு போட்டோவில் நீங்கள் ஒரு உருவத்தை பார்க்கிறீர்கள்.. அதில் வேறு ஒரு உருவமும் மறைந்து இருக்கிறது என்றால் அது ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்பார்கள்!
ரொம்ப கஷ்டமான சவால்.. இந்த டி ஷர்ட்டில் எத்தனை ஓட்டைகள் உள்ளன.. டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்!

ஆப்டிக்கல் இல்யூஷன்
அந்த வகையில் இந்த செய்தியில் ஆப்டிக்கல் இல்யூஷன் படம் இடம்பெற்றுள்ளது. உங்களுக்கு இந்த படத்தை பார்த்ததும் கருப்பு வெள்ளை புள்ளிகள் தெரியும். பலருக்கும் கருப்பு, வெள்ளை புள்ளிகள்தான் தெரியும். ஆனால் சிலருக்கு பார்த்ததும் அதில் ஒளிந்து இருக்கும் போட்டோ தெரிந்துவிடும். உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம்.

பிரபலம்
உங்களுக்கு உருவம் தெரியவில்லை என்றால்.. உங்கள் போனை கொஞ்சம் அசைத்து பாருங்கள். இந்த பக்கமும், அந்த பக்கமும் போனை அசைத்து பாருங்கள். மிதமான வேகத்தில் போனை அசைத்து பார்க்கும் போது அந்த பிரபலத்தின் புகைப்படம் உங்களுக்கு தெரியும். கூர்ந்து கவனித்து பார்த்தால் அந்த படத்தை ஈசியாக நீங்கள் கண்டுபிடித்து விடலாம்.

தெரியவில்லையா?
தெரியவில்லையா? சரி கவலை வேண்டாம். அது பிரபல பாடகரின் புகைப்படம் ஆகும். பிரபல ஆங்கில பாடகரின் புகைப்படம் ஆகும் இது. மீண்டும் ஒரு முறை போனை அடைத்து பாருங்கள். லேசாக கலைந்த முடி தெரிகிறதா? கொஞ்சம் போனை தூரமாக வைத்து அசைத்து பாருங்கள். தெரிகிறதா.. ஆம் மைக்கேல் ஜாக்சன் போட்டோதான் இதில் இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சன் போட்டோ
மைக்கேல் ஜாக்சன் புகைபடம் இதில் உள்ளது. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.. இப்போது அவரின் முகத்தை நினைவில் வைத்துக்கொண்டு போனை அசைத்து பாருங்கள் கண்டிப்பாக உருவம் தெரியும். உலகில் 10 சதவிகிதம் பேருக்குத்தான் இந்த புகைப்படம் பார்த்ததுமே தெரியும். உங்களுக்கு பார்த்ததுமே மைக்கேல் ஜாக்சன் போட்டோ தெரிந்தால் நீங்களும் 10 சதவிகிதத்தில் ஒருவர்தான்!