சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடமுடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.

Can not order to reelection in Ponparappi: Chennai High court

இந்த கலவரம் காரணமாக பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நேரத்தில் கலவரம் இல்லை, ஆகையால் அங்கு வாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மோடி பங்கேற்ற வந்தே பாரத் ரயில் துவக்க விழா.. மலைக்க வைக்கம் செலவு.. ஆர்டிஐ-யில் அம்பலம் மோடி பங்கேற்ற வந்தே பாரத் ரயில் துவக்க விழா.. மலைக்க வைக்கம் செலவு.. ஆர்டிஐ-யில் அம்பலம்

அப்போது பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி உயர்நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

English summary
Chennai high court says can not order to reelection in Ponparappi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X