"காவி" பன்னீர்.. பூஸ்ட் தந்த மேலிடம்.. மேட்டருக்கு வந்த ஓபிஎஸ்.. தேனியில் ஒலித்த "பாரத் மாதா கி ஜே"
சென்னை: நாளுக்கு நாள் அதிமுகவில் பரபரப்புகள் வெடித்து கிளம்பி வரும் நிலையில், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதே பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.
இன்று தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.. கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையைவிட, ஓபிஎஸ் மீதான எதிர்ப்புகள்தான் அதிகமாக வெளிப்பட்டது.
இந்த கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, அங்கே வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் பேனரை, எடப்பாடி ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.. அதேபோல, எடப்பாடி ஆதரவாளர்களும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர்.. இதில் சற்று ஓவராக போனவர் ஜெயக்குமார்தான்..
பன்னீர் இப்போ கண்ணீர் செல்வம்.. சுயநலவாதி ஓபிஎஸ்.. இப்படி செய்யலாமா? போட்டுத்தாக்கிய ராஜன் செல்லப்பா

பச்சை துரோகம்
"துரோகத்தின் மொத்த உருவம்" என்று தெரிவித்துள்ளார்.. ஜெயக்குமாரை பொறுத்தவரை கட்சியின் சீனியர்.. ஜெயலலிதா காலத்தில் இருந்தே அமைச்சராக இருந்தவர்.. இப்போதும் எடப்பாடியின் குரலாக இவர்தான் ஒலித்து கொண்டிருக்கிறார்.. எடப்பாடியின் நிழலாக பின்தொடர்ந்து கொண்டுமிருக்கிறார்.. ஒவ்வொரு முறையும், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான விஷயங்களை மீடியாவில் பகிர்ந்து கொள்பவர் ஜெயக்குமார்தான்.

மீட்டிங்
அப்படிப்பட்ட ஜெயக்குமார், தன் கட்சியின் பொருளாளரையே, பொதுவெளியில், தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.. இவர்கள் எத்தனை மீட்டிங் நடத்தினாலும், இவர்களுக்குள் சுமூக முடிவு எட்டப்படுவதில்லை என்ற எண்ணமும் எழுந்துள்ளது.. இனி நாளைக்கு ஓபிஎஸ் மீட்டிங் போட போகிறார்.. நாளைக்கு என்னவெல்லாம் நடக்க போகிறதோ தெரியவில்லை..

காய் நகர்த்தல்கள்
அதேசமயம், பெரும்பாலான ஆதரவுகள், எடப்பாடிக்கே இருக்கும்நிலையில், ஓபிஎஸ் இனி என்ன செய்ய போகிறார்? என்ற குழப்பமான கேள்வியும் தொண்டர்களிடம் சூழ்ந்துள்ளது. ஓபிஎஸ் ஒருசில பிளான்களை வைத்து காய் நகர்த்தலை துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.. முதலாவதாக, ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் இல்லாமல் கூட்டம் நடத்த கூடாது என்று அறிக்கை வாயிலாக ஓபிஎஸ் தெரிவித்தார்.. ஆனாலும், ஒப்புதல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி எப்படி கூட்டம் நடத்தினார் என்ற கேள்வியை முன்னெடுக்க போகிறாராம் ஓபிஎஸ்..

பாஸ்கள்
அதேபோல, ஜூலை 11ம் தேதி நடப்பதாக சொல்லி உள்ள பொதுக்குழுவை தடுக்கும் மும்முரத்திலும் உள்ளார்.. காரணம், ஜுன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும், கையெழுத்து போட்டு பாஸ் வாங்கிக் கொண்டு உள்ளே செல்லவில்லை என்கிறார்கள்.. அதாவது, போலி பாஸ்கள் மூலம் பொதுக் கூட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பது போல சேர்த்திருந்தார்களாம்.. அதிலும் எடப்பாடியின் சொந்தக்காரர்கள்கூட இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டார்களாம்..

ஆதாரங்கள்
அதுகுறித்த தகவல்களை எல்லாம் ஆதாரமாக திரட்டி, அந்த பொதுக்குழுவே செல்லாது என்றும், அறிவிக்கப்பட்ட அடுத்த பொதுக்குழுவை நடத்த தடை கேட்டும் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்ள போகிறாராம் பன்னீர்.. எனினும், பொதுக்குழு கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக, கோர்ட்டையோ, தேர்தல் ஆணையத்தையோ ஓபிஎஸ் தரப்பு இன்னும் நாடவில்லை..

மேலிடம்
ஒருவேளை அப்படி அணுகினால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. இதற்கு நடுவில், தனக்கான ஆதரவாளர்கள் குறைந்துள்ளதை உணர்ந்துள்ள ஓபிஎஸ், அவர்களை மீட்டு தன்னுடைய பலத்தை பெருக்கும் முயற்சியிலும் இறங்க போகிறாராம். இதற்கெல்லாம் காரணம், அவரது டெல்லி பயணம் ஓரளவு திருப்தியாக இருந்ததுதானாம்..

ஆண்டிப்பட்டி
நேற்றைய தினம் தேனி நோக்கி செல்லும்போது, ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் முன்பு, பாஜக மாவட்ட செயலாளர் பாண்டி, ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார்... அப்போது பாண்டி, திடீரென ஓபிஎஸ்சுக்கு காவி துண்டு அணிவித்தார்... உடனே, பாஜக சார்பில் பாரத் மாதா கி ஜே என்ற கோஷமும் எழுப்பப்பட்டது கவனிக்கத்தக்கது... நடந்து கொண்டிக்கும் அதிமுகவின் மோதல்கள் எந்த மாதிரியான முடிவை தர போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், தேனியில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது "பாரத் மாதா கி ஜே"!