சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்!

சகாயம் அரசியலுக்குள் நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை:டெல்லிக்கு ஒரு கெஜ்ரிவாலை போல, தமிழகத்துக்கு நம்ம சகாயம் வந்தால் நல்லா இருக்குமே என்று பெரும்பாலான மக்கள் ஆசைப்படுகிறார்கள்!

தேர்தல் காலம் வந்துவிட்டாலே, முதல்வர் வேட்பாளருக்கு தானாக அடிபடும் பெயர் சகாயம்!!! டெல்லியில் ஆண்டாண்டு காலமாக பாஜக, காங்கிரஸ் என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சியை யாருக்கும் விடாமல் பங்கு போட்டு கொண்டிருந்தபோது, இரண்டையுமே துடைப்பத்தால் அடித்து விரட்டி முதல்வர் ஆனார் கெஜ்ரிவால்..

இப்போது அல்ல.. முதல் தடவையாக முதல்வரானபோதே, சகாயம் பெயரின் உச்சரிப்பு அதிகமாகி விட்டது. தமிழகத்திலும் திமுக, அதிமுக கட்சிகளை விரட்ட.. ஊறிபோன ஒரே மாதிரியான அரசியலை மொத்தமாக புரட்டிப்போட ஒரு மாறுபட்ட கட்சி வராதா என்ற தமிழக மக்களின் அடிநாத ஏக்கம் தான் "சகாயம்"!!

மாற்றம்

மாற்றம்

2014 முதலே, சகாயம் அரசியலுக்கு வரவேண்டும், அவர் முதல்வரானால் நல்லா இருக்குமே என்ற பேச்சு எழுந்து வருகிறது.. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது சாத்தியமா என தெரியவில்லை.. அப்படி வந்தால், திமுக, அதிமுக கட்சிகளின் அரசியலுக்கு மாற்று அரசியலை கையோடு கொண்டு வர வேண்டும்.

நேர்மை போதுமா?

நேர்மை போதுமா?

பரம்பரை அரசியல், வாரிசு அரசியல், நன்கொடை, இலவசம் என்ற பெயரில் கருப்பு பணம், பணம் தந்தால் மட்டுமே வேட்பாளர் பதவி, ஓட்டுக்கு பணம், இப்படி புளித்து.. சலித்து போன அரசியல் இல்லாத ஒரு மாற்றத்தை சகாயம் உருவாக்குவாரா? நிச்சயம் உருவாக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். சகாயம் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தாலும், சகாயம் என்றாலே சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் நடுங்கி விடுகிறார்கள். "நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா.. சமூக நீதி தொடர்பாக சகாயத்துக்கு என்ன தெரியும்" என்றுகூட சிலர் கேட்டுள்ளனர்...

கெஜ்ரிவால்

கெஜ்ரிவால்

வாக்குக்காக மக்களிடம் செல்லாமல், மக்களுக்காகவே மக்களிடம் நெருங்கி சென்றவர் கெஜ்ரிவால்.. அதனால்தான் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடிந்தது.. "கெஜ்ரிவாலைப் போல தமிழகத்திலும் சகாயம் ஐஏஎஸ் அரசியலில் குதித்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா?" என்று நம் வாசகர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம்.. சும்மா சொல்லக்கூடாது.. மக்கள் இப்போதுள்ள ஜனநாயகத்தை அளவுக்கு அதிகமாகவே வெறுத்து போயுள்ளனர்.. சலிப்பின் உச்சத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது.

மாட்டோம்

மாட்டோம்

"நிச்சயம் ஆதரிப்போம்" என்று 63.04 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.. "ஆதரிக்க மாட்டோம்" என்று 9.71 சதவீதமும், "சகாயம் - கமல் இணைய வேண்டும்" என்பதற்கு 3.52 சதவீதம், "சகாயம் - விஜய்" இணையலாம் 1.89 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர். அதேபோல சகாயம் - ரஜினி -விஜய் இணையலாம் என்பதற்கு 2.07 சதவீதமும், "சகாயம் - ரஜினி இணையலாமே" என்று கேட்டதற்கு 3.77 சதவீதமும், "தமிழகம் வேற மாதிரியாச்சே" என்பதற்கு 16 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

Recommended Video

    vijay -sagayam ias may joins in politics?
    சாத்தியமா?

    சாத்தியமா?

    எடுத்த எடுப்பிலேயே சகாயத்துக்கு 63.04 சதவீதம் மக்கள் ஓட்டு போட்டுள்ளதில் எந்த ஆச்சரியமும் தெரியவில்லை.. அதேபோல, அவர் வேறு யாருடனும் இணைத்து பார்க்கவும், ஒப்பிட்டு பார்க்கவும் மக்கள் தயாராக இல்லை.. இது மீது சகாயத்தின் மீதான கவர்ச்சி கிடையாது... அரசியலில் ஒரு வித வெற்றிடம் கவ்விக் கொண்டுள்ளது.. ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான கோர பசிதான் நம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. அந்த பசியை போக்க சகாயம் வருவார் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த கருத்து கணிப்பு!!

    English summary
    Can sagayam become the next Kejriwal of Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X