சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வழக்கை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்காதது தவறு.. திருப்பரங்குன்றம் வழக்கில் ஹைகோர்ட் குட்டு!

வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருப்பது தவறு என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்றம் குட்டு!- வீடியோ

    சென்னை: நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருப்பது தவறு என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

    தேர்தல் வழக்குகள் காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் தேர்தல் நடக்கவில்லை. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    வில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்! வில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்!

    திருப்பரங்குன்றம் வழக்கு

    திருப்பரங்குன்றம் வழக்கு

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை போட்டு இருந்தார். இது ஜெயலலிதா அனுமதி இல்லாமல் பெறப்பட்ட கையெழுத்து என்று திமுக வேட்பாளர் சரவணன் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

    வழக்கு நிலுவை

    வழக்கு நிலுவை

    இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து இந்த வழக்கு தீர்ப்பிற்காக நிலுவையில் இருக்கிறது. ஆனால் இதை காரணம் காட்டி திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    குட்டு

    குட்டு

    இதுகுறித்து சென்னை ஹைகோர்ட் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. அதில், வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருப்பது தவறு. தேர்தல் ஆணையம் இப்படி முடிவு எடுத்து இருக்க கூடாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தீர்ப்பு எப்போது

    தீர்ப்பு எப்போது

    திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும். திமுக சரவணன் தொடுத்த வழக்கில் இந்த வாரமே கண்டிப்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    English summary
    Can't accept postponing Thiruparangkundram election due to court case says MHC in DMK Saravanan case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X