சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியூஸ் பேப்பர் வழியாக கொரோனா பரவும்.. பிரிண்டிங்கிற்கு தடை தேவை.. வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், செய்தித் தாள்களுக்கு விலக்களித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு, ஊரடங்கு காலத்தில் செய்தித்தாள்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், செய்தித்தாள் நிறுவனங்கள் இணையத்தளங்கள் மூலமாக செய்திகளை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Cant ban news papers for coronavirus: Chennai High Court

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, காகிதத்தில் கொரோனா வைரஸ் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும் என்பதால், செய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசுத்தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆரம்பகட்ட ஆய்வுகளில் செய்தித்தாள் கொரோனா பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார்.

Recommended Video

    Beela Rajesh : மழை காரணமாக கொரோனா தொற்று அதிகமாகுமா? - பீலா விளக்கம்

    அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற வழக்கு கோப்புகள் அனைத்தும் காகிதத்தில் தான் உள்ளது... பணம் காகிதம் தான்... அனைத்து மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில், காகிதம் மூலம் கொரோனா பரவலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    English summary
    During the curfew announced due to the corona threat, the Madras High Court dismissed the case seeking a ban on the injunction order for news papers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X