சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் செய்ய அனுமதிக்க மாட்டோம்.. ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு!

நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக படம் நடித்து வருகிறார். இவர் எப்போது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் சந்திப்பு நடத்தினார்.

Cant Give Visa: Sri Lanka govt says to Rajinikanth citing political reasons

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஷ்வரன் கேட்டறிந்தார். மேலும் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழர்கள் பிரச்சனை, திரைப்பயணம் குறித்தும் பேசினார்கள்.

அதேபோல் இலங்கை வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும். அரசியல் ரீதியான கூட்டங்களில் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்றும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

Recommended Video

    துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை!

    இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கை ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

    வேலூர் தேர்தலின் போது ஏன் இந்த ஞானம் வரவில்லை.. திமுகவிற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி.. பரபரப்பு! வேலூர் தேர்தலின் போது ஏன் இந்த ஞானம் வரவில்லை.. திமுகவிற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி.. பரபரப்பு!

    அதன்படி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது.அவர் அரசியல் நடவடிக்கைகாக இலங்கை வருகிறார். அவர் மக்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

    அரசியல் திட்டங்களை செயல்படுத்த இலங்கை அரசு எப்போதும் விசா வழங்காது. இதனால் ரஜினிக்கும் விசா வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

    English summary
    Can't Give Visa: Sri Lanka govt says to Actor Rajinikanth citing political reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X