சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம்மொழி பூங்காவிற்கு தடை விதிக்க முடியாது.. தொடர்ந்து இயங்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா தொடர்ந்து செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா தொடர்ந்து செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இது சென்னை அண்ணா சாலையில், ஜெமினி பாலம் கீழே அமைந்து இருக்கிறது. இதற்கு தினமும் நூற்றுக்கணக்கில் மக்களும், காதல் ஜோடிகளும் வருவதுண்டு.

இந்த பூங்கா கடந்த 2010ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை.. அரசாணை வெளியிட்டது அரசு ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை.. அரசாணை வெளியிட்டது அரசு

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்த பூங்கா, அந்த பகுதியில் இருந்த தனியார் ஹோட்டலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகும். அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி, இந்த பூங்கைவை அமைத்தது. இதையடுத்து இந்த நிலத்தின் உரிமையாளர் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார்.

நடந்தது

நடந்தது

நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, செம்மொழி பூங்காவை மூடிவிட்டு, தன்னுடைய நிலத்தை மீண்டும் அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

என்ன தீர்ப்பு

என்ன தீர்ப்பு

அதன்படி சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா தொடர்ந்து செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நிலத்தை இப்போது கேட்பது சரியான கோரிக்கை கிடையாது. அதனால் செம்மொழி பூங்கா எப்போதும் போல செயல்படலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

அறிவுரை வழங்கினார்

அறிவுரை வழங்கினார்

அதே சமயம் செம்மொழி பூங்கா தனியார் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட கூடாது, பொது மக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அங்கு மக்கள் பயன்பாட்டிற்கான செயல்பாடுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

English summary
Can't put a ban on Semmozhi Poonga says Supreme Court in a case from the land ex-owner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X