சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

சென்னை மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லையில் பரவலாக மழை: அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

    சென்னை: சென்னை மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    சென்னையை அடுத்த மாடம்பாக்கம், சிட்லபாக்கம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, 2.70 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மாடம்பாக்கம் ஏரியில் ஐந்து கிணறுகள் தோண்ட அரசு நடவடிக்கை எடுத்தது.

    Cant put ban on Chennai Maadampakkam Well project says Madras High Court

    இதற்கு தடை விதிக்க கோரி அப்பகுதிவாசிகள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அவர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

    அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து மாடம்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாகவும், அப்பகுதியில் விவசாயம் குறைந்து விட்டதாகவும் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    அந்த உத்தரவில், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரும் அரசின் முடிவை சட்டவிரோதமானது எனக் கூற முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தை சட்டவிரோதமானது எனக் கூற முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    English summary
    Can't put ban on Chennai Maadampakkam Well project orders Madras High Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X