சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியுமா?.. டாக்டர் முத்து செல்லக்குமாரின் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை சில குறிப்பிட்ட உணவுகளால் மட்டும் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை இது பல்வேறு அம்சங்களை பொறுத்தது என்று மருத்துவர் பேராசிரியர் முத்துச் செல்லக்குமார் தெரிவித்தார்.

மருத்துவர் பேராசிரியர் முத்து செல்லக்குமார் , எம்பிபிஎஸ், எம்டி முடித்துவிட்டு நீரழிவு, ஆஸ்துமா, மனநல ஆலோசனை, அலர்ஜி உள்ளிட்டவற்றில் முதுகலை படிப்பு முடித்தவர் ஆவர். பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். இவர் கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

"கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்த நேரத்தில் நம்ம நாட்டில் மட்டும் ஒரு முக்கியமான செய்தி ஓடிக்கொண்டே இருக்கிறது. டிவி, நியூஸ் பேப்பர், யூடியூப், சமூக வலைதளங்கள் என எதில் பார்த்தாலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை ( immunity booster) அதிகரிப்பது குறித்து செய்திகள் ஓடுகின்றன.

மகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயி.. இருவரின் கல்விச் செலவை ஏற்றார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுமகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயி.. இருவரின் கல்விச் செலவை ஏற்றார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு

நோய் எதிர்ப்பு திறன்

நோய் எதிர்ப்பு திறன்

நமது உடலில் ஏற்கனவே நோய் எதிர்ப்பு திறன் செயல்படுவதற்கு சில வைட்டமின்கள், சில பொருட்கள் நார்மல் செயலாக்கத்திற்கு தேவை தான். அதற்காகத்தான் நமது அரசாங்கம் கூட வைட்டமின் சி, வைட்டமின் டி மாத்திரைகளை தருகிறார்கள். மாற்று மருத்துவ முறையிலும் கபசுர குடிநீர் உள்ளிட்ட சில மருந்துகளை தருகிறார்கள். இயற்கை மருத்துவத்திலும் சில மருந்துகள் தருகிறார்கள்.

மக்களுக்கு குழப்பம்

மக்களுக்கு குழப்பம்

ஆனால் இன்னமும் கூட சிலர் கொரோனாவுக்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். கபசுர குடிநீரில் அனைத்தும் இருக்கிறது. இந்நிலையில் மஞ்சள், துளசி தொடங்கி அவரவருக்கு தெரிந்த என்ன தோன்றுகிறதோ அந்த உணவுகளை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. மக்கள் அரசின் ஆலோசனைப்படி தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

டெஸ்ட்கள் இல்லை

டெஸ்ட்கள் இல்லை

அறிவியலாளர்கள் சொல்வது என்னெவென்றால், இம்யூனிட்டி பூஸ்டரை (நோய் எதிர்ப்பு சக்தியை) உடனே எல்லாம் அதிகரிக்க வைக்க முடியாது. சிலர் 30 நாளில் கூட்டிவிடுகிறேன். 10 நாளில் கூட்டிவிடுகிறேன், 10 வினாடிகளில் கூட்டிவிடுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். எனவே இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். டாக்டர்கள் நம்மிடம் இம்யூனிட்டி டெஸ்ட் பார்க்க வேண்டும் என்று எழுதி தருகிறார்களா.. இல்லை.. உடலில் சோதிக்கிறாரா இல்லை. லேபில் போய் பரிசோதிக்கிறாரா.. இல்லை.. ஏனெனில் தொற்று இருந்தால் தான் தெரியும் நமது இம்யூனிட்டியின் தன்மை.

பார்க்க இயலாது

பார்க்க இயலாது

தொற்று வந்த பின்னரே நோய் எதிர்ப்பு செல்கள், ஆன்டிபாடிகள், டி லிம்போசைட், பி லிம்போசைட் உள்ளிட்ட பல்வேறு எதிர்பொருட்கள் அப்போதுதான் வருகிறது. எனவே இப்போதைக்கு எதுவும் தெரியாது. இதெல்லாம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் வந்துவிட்டது என்றொல்லாம் பார்க்க முடியாது.. டெஸ்டிங்கும் இல்லை. வேண்டுமென்றால் உடலில் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையை பார்க்க முடியும். டிசி கவுண்ட் (differen count) பார்க்கலாம். அதில் எவ்வளவு லிப்போசைட் உள்ளிட்டைவை குறைந்திருக்கிறா என்பதை பார்க்கலாம். எனவே வைரஸ் தொற்று வருவதற்கு முன் இம்யூனிட்டி சரியாக இருக்கிறது என்பதை பார்க்க முடியாது. எனவே அதுகுறித்து உங்கள் கவனத்தை அதிகம் திருப்ப வேண்டாம்.

கிருமி போனால் தெரியும்

உடல் எதிர்ப்பு திறன் என்பது இயற்கையாகவே உள்ளது. பிறவியிலேயே வந்துவிடும். வாயில் சுரக்கும் நீர், நமது தோல், சிறுநீர் போகக்கூடிய பகுதிகள், குடல் பகுதியில் (இரைப்பை பகுதியில்) அமிலத்தன்மையில் இருக்கும், கண்ணில் இருந்து வரக்கூடிய கண்ணீர், இப்படி உடலின் எல்லா இடத்திலேயும் எதிர்ப்பு திறன் சக்தி இருக்கும். அணுக்களும் இருக்கும். இதேபோல் அடாப்டி இம்யூனிட்டி என்று சொல்லக்கூடிய நோய் எதிர்ப்பு திறன் இருக்கும். நமது உடலுக்குள் ஏதாவது கிருமி போய்விட்டால், வைரஸோ, பாக்டீரியாவோ போய்விட்டால் இந்த அடாப்டி இம்யூனிட்டி இருக்கும். அந்த அடாப்டி இம்யூனிட்டியில் செல்லுலார் இம்யூனிட்டி. ஹூமரல் இம்யூனிட்டி என இரண்டு வகை உள்ளது. செல்லுலார் இம்யூனிட்டி. செல்களால் ஆனது. டி லிப்போசைட்ஸ் (டி செல்கள்), பி லிம்போசிட்ஸ் (பி செல்கள்) என்று இருவகை செல்களால் ஆனது. இதில் டி செல்களை எடுத்துக்கொண்டால் ( டி லிப்போசைட்ஸில்) நான்கு வகை உள்ளது. இதேபோல் பி செல்ளை ( பி லிம்போசிட்ஸ்) எடுத்துக்கொண்டால் இந்த பி செல்கள் தான் பிளாஸ்மா செல்களாக மாறி ஆன்டிபாடியை உற்பத்தி செய்கிறது. டி செல்கள் மற்றும் பி செல்கள் மெமரி செல்களாக செயல்படுகிறது. இவைதான் ஏற்கனவே நம்மை தாக்கிய வைரஸ் நம்மை தாக்கினால், உடனே இம்யூனிட்டி சிஸ்டத்தை அலார்ட் செய்து அதே அழிப்பதற்கான எல்லா விதமான வேலைகளையும் முன்னெடுக்கும்' என்றார்.

English summary
Can the immune system be boosted? doctor muthu sellakumar deatiled explain this video, he said immune system can not be boosted suddenly; see the article
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X