சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டேஞ்சர்".. திருமாவளவனின் விசிகவை தடை செய்ய.. மேலிடம்வரை ஓடிய சிவசேனா.. "அவர்"கிட்டயே சொல்லிடுச்சாமே

விசிக திருமாவளவன் குறித்து ஜனாதிபதியிடம் சிவசேனா புகார் தந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: விசிகவை தடை செய்ய வேண்டும், அக்கட்சியின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வரை, புகார் பறந்துள்ள சமாச்சாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டு பண்ணி வருகிறது.. யார் புகார் தந்தது? என்ன நடந்தது?

சமீபகாலமாகவே திருமாவளவனின் அரசியல் உற்றுகவனிக்கப்பட்டு வருகிறது.. ஆளும் திமுக கூட்டணியில் இருப்பது விசிகவுக்கு பலம் என்றாலும், தன்னுடைய தனித்துவத்தை அக்கட்சி என்றுமே இழந்ததில்லை.

தமிழக தேர்தல்களில் வாக்கு சதவீதத்தை தீர்மானிக்கக்கூடிய அளவுக்கு விசிக களமாடி வருவதை மறுக்க முடியாது.. அதிலும், இந்துத்துவா, மதவாத சக்திகளுக்கு எதிராக திருமாவளவனின் அரசியல், எதிர்க்கட்சிகளை எரிச்சலூட்டி கொண்டிருக்கிறது..

அவசர அவசரமாக.. திருமாவளவன் மேடையில் ஓடிவந்து சொன்னாரே.. இப்படி பாஜகவில் செய்வீங்களா: டாக்டர் ஷர்மிளாஅவசர அவசரமாக.. திருமாவளவன் மேடையில் ஓடிவந்து சொன்னாரே.. இப்படி பாஜகவில் செய்வீங்களா: டாக்டர் ஷர்மிளா

 திருமா + அலர்ட்

திருமா + அலர்ட்

கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி, பாஜகவிடம் கவனமாக இருக்கும்படி, அதிமுகவையும் அடிக்கடி அலர்ட் செய்து வருகிறார் திருமாவளவன்.. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சனாதனமா? சனநாயகமா? என்கிற கோட்பாட்டை முன்வைத்துதான் மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தி திமுக கூட்டணியை பலப்படுத்தினார் திருமாவளவன்.. மேலும் தானே முன்னின்று, ஓடிஓடிச்சென்று ஒவ்வொரு கட்சியாக பேசி ஆதரவையும் திரட்டினார்.. இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காகத்தான், திமுக அரசின் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டு, சமீபத்தில் நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்காக தடுப்பு முயற்சிகளையும் மேற்கொண்டார்.

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மதவாதிகளின் பேச்சுக்கள், போன்றவற்றுக்கு, சரியான பதிலடிகளை தந்து வருவது திருமாவளவன் என்பதால், அவரது முயற்சி ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு பெரும் நிம்மதியை தந்து வருவதை மறுக்க முடியாது.. ஆளும் தரப்பில் திமுக உள்ளதால், எதையும் வெளிப்படையாக செய்ய முடியாத சூழலில், திருமாவளவன், இதுபோன்ற தர்மசங்கட சூழலில் "கைகொடுத்து உதவி வருவதும் பாராட்டையே பெற்று வருகிறது.

 பறந்த புகார்

பறந்த புகார்

அதனால்தான், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், விசிகவை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக முழங்கி எழுப்பி வருகிறார்கள்.. விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. எப்படியும் திமுக கூட்டணியில் இணைந்தே விசிக இந்த முறையும் தேர்தலை சந்திக்கும் என்றே தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், விசிகவை தடை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடமே புகார் பறந்துள்ளது.. அதுமட்டுமல்ல, அக்கட்சியின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் சிவசேனா சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 திருமாவளவன்

திருமாவளவன்

சிவசேனா மாநில தலைவர் திருமுருக தினேஷ், இதுகுறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மற்றும் தமிழக கவர்னருக்கு சிவசேனா மனு ஒன்றினை அனுப்பியுள்ளார்.. அந்த மனுவில், தேசத்தை பாதுகாக்கும் ஒப்பற்ற பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. 'தனி தமிழ்நாடு' என்ற பேச்சை, அக்கட்சியின் தலைவரும், லோக்சபா எம்பியுமான திருமாவளவன் பேசி வருகிறார். தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் எதிராக பேசி வரும் அந்த கட்சியை தடை செய்து, அதன் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

 கடலூரில் அனல்

கடலூரில் அனல்

பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழிக்கு புறம்பாக செயல்படும் திருமாவளவனை, வரும் லோக்சபா கூட்ட தொடரில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஜனாதிபதியிடம் சிவசேனா அமைப்பு வைத்துள்ள இந்த வேண்டுகோள் எந்த அளவுக்கு பரிசீலிக்கப்படும் என்று தெரியவில்லை.. 2 நாட்களுக்கு முன்பு, கடலூரைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு விசிக நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், இப்படி ஒரு புகார் கிளம்பி உள்ளது. அந்த ராணுவ வீரரின் குடும்பத்தை நேரில் சந்தித்தது பாஜகவினர் ஆதரவும் தந்து வரும் நிலையில், இந்த விஷயம் தமிழக அரசியலில் அனலடிக்க ஆரம்பித்துள்ளது..

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

விசிகவை தடை செய்ய வேண்டும் என்று இதற்கு முன்பே பலமுறை வெளிப்படையான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. சமீபத்தில், கோவை வெடிகுண்டு விபத்து விவகாரத்திலும் விசிக மீது இதே வேண்டுகோளை வைத்திருந்தது தமிழக பாஜக.. திருமாவளவன் இந்த நாட்டின் தீய சக்தி என்று எச்.ராஜா விமர்சித்திருந்தார்.. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் தான் உள்ளனர் என்று திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.. அப்போது, திருமாவளவன், சீமான் எந்த ஜென்மங்கள் எச்ஐ தெரியவில்லை.. ஆனால் அவர்கள் தேச விரோதிகள்..

மெயின் திருமா

மெயின் திருமா

கோவையில் போலீஸ் ஸ்டேஷன் முன்பாகவே, எஸ்டிபிஐ, பிஎப்ஐ போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், இவர்களுக்கு உறுதுணையாக இருப்பது திருமாவளவன்தான்.. விசிகவுக்கும், எஸ்டிபிஐ க்கும் வித்தியாசம் இல்லை, அதனால், தமிழக அரசு, உடனடியாக விசிக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டுக்கு விரோதமான காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவரை கூட்டிவந்து கூட்டம் நடத்தியவர் சீமான்.. அதனால், சீமான், திருமாவளவன் இவர்கள் 2 பேரையுமே உடனே கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Can vck be banned and Complaint against Thirumavalavan to the President
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X