சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈஸ்வரனுக்கு திடீர்னு என்னாச்சு.. நாமக்கல்லை சின்ராஜிடம் கை மாத்திட்டாரே!

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாமக்கல்லை சின்ராஜிடம் ஒப்படைத்த ஈஸ்வரன்

    சென்னை: ஈஸ்வரனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலையே.. திடீரென கொங்கு மண்டல வேட்பாளரை மாற்றி அறிவித்திருக்கிறார்!

    திமுகவை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில் வீக்தான்.. அதிமுகவோ அதிக பலத்துடன் இருக்கிறது. இதற்கு நடுவில் அந்தஸ்தை பெற்றுள்ளதுதான் கொங்கு நாடு மக்கள் தேசிய கழகம்.

    கொங்கு மண்டலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு தி.மு.க. உட்பட போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள். இக்கூட்டணியில் உள்ள கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி.

    2-ம் இடம்

    2-ம் இடம்

    கடந்த தேர்தலில், பாஜக கூட்டணியில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், போட்டியிட்டு, 2-ம் இடத்துக்கு முன்னேறி, திமுகவை 3-வது இடத்துக்கு தள்ளிவிட்டார்.

    ஈஸ்வரன் செல்வாக்கு

    ஈஸ்வரன் செல்வாக்கு

    எப்பவுமே வலுவான முன்னணியில் உள்ள அதிமுகவோ, 2-வது இடத்தில் இருக்கும் ஈஸ்வரனை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் திமுகவுடன் வந்து இணைந்தார் ஈஸ்வரன். எப்படியும் நம்மைவிட வலுவான நபர் என்ற முறையிலும், கொங்கு மண்டலத்தில் இப்படிப்பட்ட ஒரு நபர் நம்முடன் இருப்பது நல்லதுதான் என்ற முறையிலும், கடந்த முறை ஈஸ்வரன் பெற்ற வாக்குகளை மனதில் வைத்தும் கூட்டணியில் சேர்த்து கொண்டது.

    நாமக்கல்

    நாமக்கல்

    கூடவே ஒரு கொமதேகவுக்கு எம்பி தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்ற கண்டிஷனை போட்டது திமுக. அதனால் எப்படியும் அந்த ஒரு தொகுதி நாமக்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அந்த ஒரு இடம் ஈஸ்வரனுக்குதான் என்பதும் கணிக்கப்பட்டது.

    ஏ.கே.பி.சின்ராஜ்

    ஏ.கே.பி.சின்ராஜ்

    ஆனால் இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. ஈரோட்டில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் என்று ஈஸ்வரன் அறிவித்திருக்கிறார். சின்ராஜ் வேட்பாளர் என்றால், ஈஸ்வரன் திமுக கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திடீர் அறிவிப்பு

    திடீர் அறிவிப்பு

    ஈஸ்வரன்தான் வேட்பாளர் என்றே திமுக உட்பட அதன் கூட்டணியும் இதுவரை நினைத்தே வந்தது. ஆனால் சின்ராஜை நிறுத்தி உள்ளார் ஈஸ்வரன். வேட்பாளர் சின்ராஜ் நாமக்கல்லில் பெரிய பிசினஸ்மேன் என்று சொல்லப்படுகிறது. கட்சியில் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். எதற்காக ஈஸ்வரன் இப்படி ஒரு முடிவை அறிவித்தார் என்பதுதான் தெரியவில்லை!

    English summary
    Kongu Mandalam Easwaran has announced Namakkal Candidate ChinnRaj
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X