சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சு.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், கோ.பொன்னுத்தாய்.. ஓ காட்.. அமமுகவுக்கு வந்த சோதனை

தென்காசி தொகுதியில் ஒரே பெயரில் 4 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே பெயரில் இத்தனை வேட்பாளர்களா ? வெறுப்பில் அமமுக

    சென்னை: இது என்னடா அமமுகவுக்கு வந்த சோதனை? அடி மேல் அடி.. இடி மேல் இடியாய் விழுந்து கொண்டிருக்கிறது!

    ஆரம்பம் முதலே எத்தனையோ விஷயங்களை தாண்டி டிடிவி தினகரன் சமாளித்து வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் சமாளிக்கவே முடியாமல் போனது சின்னம் சமாச்சாரம்தான்!

    குக்கர் போய் பரிசு பெட்டி வந்தது! ஆனால் தமிழக மக்களிடையே பரிச்சயமான இந்த குக்கர் சின்னம், இந்த முறை போட்டியிட போகும் நான்கைந்து சுயேச்சைகளிடம் பல டிசைன்களில் சிக்கியுள்ளது.

    என்னை தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் ரூ.40 கோடி இறக்கியிருக்காங்க... திருமா பகீர் என்னை தோற்கடிக்க அதிமுகவும், பாஜகவும் ரூ.40 கோடி இறக்கியிருக்காங்க... திருமா பகீர்

    குக்கர் சின்னம்

    குக்கர் சின்னம்

    சுயேச்சைகளுக்கு தர வேணாம் என்று எவ்வளோ தினகரன் சொல்லி பார்த்தும், அதை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை என தெரிகிறது. அதுவும் இல்லாமல் வாக்களிக்கும் இயந்திரத்தில் அமமுக தரப்பை வெறுப்பேற்றுவது போலவே, பரிசுப்பெட்டி சின்னத்தையே ஒட்டியே குக்கர் சின்னமும் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

    4 பெண் வேட்பாளர்கள்

    4 பெண் வேட்பாளர்கள்

    சின்னம்தான் இப்படி என்றால், வேட்பாளர் பெயரோ அதற்குமேல் இருக்கிறது. தென்காசி அமமுக வேட்பாளராக சு. பொன்னுத்தாயி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதே தென்காசியில் 4 பொன்னுதாய்கள் இருக்கிறார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்

    அதாவது, சு.பொன்னுத்தாய், கோ.பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், மா.பொன்னுத்தாய்.. என ஒரே பெயரில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள் என்பது அடுத்த ஷாக்! இவர்கள் 4 பேருமே ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்களாம்.

    மனு தாக்கல்

    மனு தாக்கல்

    கடைசியில் அமமுக பொன்னுதாயியிக்காக, வாக்கு சேகரிக்க சி.ஆர்.சரஸ்வதி தென்காசிக்கு வந்து போனார்... பிறகு தினகரன் வந்து போனார்! இந்த பெயர் குழப்பம் பற்றி சு.பொன்னுதாயி சொல்லும்போது, "திமுகவினர்தான் பொன்னுதாய் என்ற பெயரில் உள்ளவர்களை தேடி பிடித்து மனு தாக்கல் செய்து வைத்துள்ளனர். எத்தனை பேர் போட்டியிட்டால் என்ன, நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்கிறார்.. பொன்னுதாயி.. ஸாரி.. சு.பொன்னுதாயி!

    English summary
    4 female candidates contesting same name Ponnuthaayi in Thenkasi Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X