சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்கதான் பார்த்துக்கணும்.. ஒரே போடாக போட்ட கமல்ஹாசன்.. ஆடிப்போன மநீம நிர்வாகிகள்.. பக்கா முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. மநீம கட்சிக்கு உள்ளேயே இந்த அறிவிப்பு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் வாழ்க்கைக்குள் வந்த நாளில் இருந்தே மக்கள் நீதி மய்யம் கட்சி பல புதிய முன்னெடுப்புகளை, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மாற்று அரசியல் என்பதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

அதிமுக, திமுகவின் ஸ்டைல் அரசியலை ஓரம்கட்டிவிட்டு தனக்கு என்று புதிய பாணியை கையில் எடுக்க கமல்ஹாசன் தீவிரமாக முயன்று வருகிறார். இதில் படிப்படியாக அவர் முன்னேற்றமும் அடைந்துவிட்டார்.

 பெண்களால்.. பெண்களுக்காக.. பெண்களுக்கென்று - மக்கள் நீதி மய்யத்தின் 7 செயல் திட்டங்கள் பெண்களால்.. பெண்களுக்காக.. பெண்களுக்கென்று - மக்கள் நீதி மய்யத்தின் 7 செயல் திட்டங்கள்

சிறப்பு

சிறப்பு

தற்போது சட்டசபை தேர்தலில் பிசியாக இருக்கும் கமல்ஹாசன் மூன்றாவது அணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் என்று நினைப்பவர்களின் வாக்குகளை கவரும் வகையில் மூன்று அணி அமைக்கும் யுக்தியை கமல்ஹாசன் கையில் எடுத்துள்ளார். இதில் ஏற்கனவே ஐஜேகே, சமக ஆகிய கட்சிகள் இணைந்துவிட்டது.

அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

இப்படிப்பட்ட நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளருக்கான தேர்தல் செலவை கட்சி செய்யாது. வேட்பாளர்கள்தான் செய்து கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதாவது தேர்தல் பிரச்சார செலவு எல்லாம் தனிப்பட்ட வேட்பாளர்களின் பொறுப்பு, கட்சி நிதி இதற்கு வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.

வழக்கம்

வழக்கம்

பொதுவாக தேர்தல் செலவுகளை மற்ற கட்சிகளிலும் வேட்பாளர்கள்தான் செய்வார்கள் என்றாலும், இன்னொரு பக்கம் கட்சி சார்பாகவும் செலவுகள் செய்யப்படும். மொத்தமாக தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதால் கட்சி சார்பாகவும் செலவுகள் செய்யப்படும். ஆனால் இந்த பாரம்பரியத்தை மக்கள் நீதி மய்யம் மொத்தமாக உடைத்து, வேட்பாளர்கள் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

காரணம்

காரணம்

தேர்தலுக்கு செலவு செய்யும் கட்சிகள்தான் ஊழல் செய்கிறது, இதுதான் ஊழலை, முறைகேட்டை ஊக்குவிக்கிறது, அதனால் வேட்பாளர்களே எல்லா செலவையும் செய்யட்டும் என்று கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். இவரின் முடிவு கட்சிக்குள் ஒரு சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

ஆனாலும் கட்சியில் பெரும்பாலானோர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது நல்ல முடிவுதான். துணிச்சலாக கமல் இதை அறிவித்துள்ளார். சுயமாக தேர்தல் செலவுகளை செய்தால் வேட்பாளர்கள் இன்னும் கடினமாக உழைப்பார்கள், என்று கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

English summary
Party Candidates should take care of their own campaign expenses says MNM Chief Kamal Haasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X