சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போரூர் கார் குடோன் தீ விபத்து.. சரசரவென்று சாம்பலான கார்கள்.. இத்தனை கோடி நஷ்டமா?

போரூர் கார் குடோன் தீ விபத்து காரணமாக சுமார் 700-800 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை போரூர் தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து

    சென்னை: சென்னை போரூரில் உள்ள கார் குடோன் தீ விபத்து காரணமாக சுமார் 700-800 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான உண்மையான காரணம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

    இந்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இந்த தீ போரூர் பகுதி முழுக்க பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    எங்கு ஏற்பட்டது

    எங்கு ஏற்பட்டது

    இந்த விபத்து சரியாக போரூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே ஏற்பட்டுள்ளது. இந்த இடம் முழுக்க முழுக்க போக்குவரத்து நெரிசல் உள்ள இடம் என்பதால் இந்த விபத்து காரணமாக மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

    ஏன் இருந்தது

    ஏன் இருந்தது

    காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் தீ பற்றி எரிந்துள்ளது. ஆனால் இது எப்படி எரிந்தது என்பதற்கான முழு விவரங்கள் தெரியவில்லை. 200 கார்கள் அங்கு இதுவரை எரிந்து சாம்பலாகி உள்ளது. இன்னும் நிறைய கார்கள் எரிந்து கொண்டு இருக்கிறது. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

    என்ன கார்

    என்ன கார்

    இந்த கார்கள் எல்லாம் நிஸான் நிறுவனத்தை சேர்ந்த ஒரே மாடல் கார்கள் ஆகும். முன்னாள் ஏர்செல் புரோமோட்டரான தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்த கார்கள் இவை என்று கூறப்படுகிறது. யூடு கால் டாக்சி என்ற கால் டாக்சி நிறுவனத்தை தொடங்குவதற்காக வாங்கப்பட்ட கார்கள் இவை என்றும் தெரிவிக்கிறார்கள்.

    சேதம்

    சேதம்

    இந்த கார்கள் நாசம் ஆனதன் காரணமாக சுமார் 700-800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அங்கு தற்போது தீ வேகமாக பரவி வருவதால் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Car fire accident in Porur: The private company faces more than Rs. 700 Cr loss due to the fire disaster in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X