ஜக்கி வாசுதேவின் பைக் பயணத்தை காட்டமாக விமர்சித்த இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா!
சென்னை: ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மண் வளம் காப்போம் என்ற முழக்கத்துடன் தொடங்கி இருக்கும் சர்வதேச பைக் பிரச்சார சுற்று பயணத்தை முட்டாள்தனமானது என்று கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கடுமையாக சாடியுள்ளார்.
ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நவராத்திரி விழாவை தொடர்ந்து மண் வளத்தை காப்பது தொடர்பாக உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பைக் பயணத்தை தொடங்கி இருக்கிறார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து புறப்பட்டு 30,000 கி.மீ. தூரம் பயணித்து இந்தியா வர இருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.

இந்திய அளவிலும் உலகளவிலும் ஏராளமான பக்தர்களை கொண்டுள்ள ஜக்கி வாசுதேவ் இயற்கையை காக்க பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நதிநீர் இணைப்பை வலியுறுத்தி RALLY FOR RIVERS என்ற பிரச்சாரத்தை தொடங்கிய ஜக்கி, காவிரி கரையோரம் 242 கோடி மரங்களை நட்டு காவிரியை மீட்போம் எனக்கூறி காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தையும் நடத்தி பணம் வசூலித்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த பயணத்தையும் தொடங்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.
இதனிடையே லண்டனில் மண் வளம் காப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கி இருக்கும் ஜக்கி வாசுதேவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, "இது எவ்வளவு முட்டாள்தனமானது. பலரும் இந்த முட்டாள்தனத்தை வாங்குகின்றனர். ஏற்கனவே இவர் நடத்திய மரம் நடும் நாடகத்தை விட்டுவிட்டு இதை தொடங்குகிறார். எந்த ஒரு சுதந்திரமான அமைப்பாவது இதுகுறித்து சரிபார்த்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்."
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications