சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடக இசைக்கலைஞர் 'பிக்பாஸ் நைனா' மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார்

Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடக இசைக்கலைஞரான பிக்பாஸ்3-வது சீசனில் பங்கேற்று போட்டியாளர்களால் நைனா என்று அழைக்கப்பட்ட மோகன் வைத்யா இன்று பாஜகவில் இணைந்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் திரைபிரபலங்கள் வரிசை கட்டி பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்ட போது திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வத்தை வளைத்தார்.

பெரிய விக்கெட் விழலை

பெரிய விக்கெட் விழலை

இதனால் அடுத்தடுத்து அரசியல் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவ வைக்கும் நடவடிக்கைகளை முருகன் மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகளில் பெரிய விக்கெட்டுகளை முருகன் வீழ்த்தவில்லை.

பாஜகவில் குஷ்பு

பாஜகவில் குஷ்பு

அதேநேரத்தில் திரை பிரபலங்கள் பலரும் வரிசையாக பாஜகவில் இணைவதும் அவர்களுக்கு கட்சியில் ஏதோ ஒரு பொறுப்பு வழங்கப்படுவதும் தொடருகிறது. அண்மையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். இப்போது தமிழக பாஜகவின் முகங்களில் ஒருவராக குஷ்புவை முன்னிறுத்தும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

பாஜகவில் வனிதாவா?

பாஜகவில் வனிதாவா?

இதனிடையே பிக்பாஸ்3 சீசனில் பங்கேற்ற நடிகை வனிதா பாஜகவில் இணைவார் நேற்று தகவல் வெளியானது. ஆனால் தாம் இணையும்போது அறிவிக்கிறேன் என கூறிவிட்டார் வனிதா.

 நைனா மோகன் வைத்யா

நைனா மோகன் வைத்யா

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான கர்நாடக இசைக் கலைஞர் மோகன் வைத்யா இன்று பாஜகவில் இணைந்தார். பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்களால் அன்புடன் நைனா என அழைக்கப்பட்டவர் மோகன் வைத்யா. சென்னையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் மோகன் வைத்யா.

English summary
Carnatic singer Mohan Vaidya has joined BJP on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X