சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்

Google Oneindia Tamil News

Recommended Video

    கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்- வீடியோ

    சென்னை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் மகள், மாளவிகா, வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்ய உள்ளதால், சுதா ரகுநாதனுக்கு சபாக்களில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்க கூடாது என்பது உட்பட பல்வேறு வகைகளில் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சன குரல்கள் எழுந்துள்ளன.

    சுதா ரகுநாதன் மகள், மாளவிகாவுக்கும், ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட மைக்கேல் முர்பி என்பவருக்கும் திருமணம் நிசசமாகியுள்ளது. இதுதொடர்பான திருமண பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியானது முதலே சுதா ரகுநாதன் டார்கெட் செய்யப்பட்டு வருகிறார்.

    Carnatic singer Sudha Ragunathan targeted for her daughter marriage

    சுதா ரகுநாதனை இனிமேல் கச்சேரிகளில் பாட அனுமதிக்க கூடாது என்று வலதுசாரி இந்துக்கள் ட்வீட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 5 நாட்களாகவே, இதுபோன்ற ஏச்சுக்களும், பேச்சுக்களும், சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

    2018ம் ஆண்டில், நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஓஎஸ் அருண் ஆகியோர், கர்நாடக இசையில், கிறிஸ்தவ பாடல்களை பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, சுதா ரகுநாதன் குறி வைக்கப்பட்டுள்ளார்.

    சுதா ரகுநாதன் மற்றும் அவரது மகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டதாகவும், எனவே இனிமேல் கிறிஸ்தவ பாடல்களை பாடவே அனுமதிக்க வேண்டுமே தவிர, கோயில்களில் நிகழ்ச்சிகள் நடத்த விடக்கூடாது என்ற குரல்கள் வலதுசாரி இந்து ஆதரவாளர்களிடமிருந்து எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

    சுதா ரகுநாதன் மருமகனாகப்போகிறவர், ஆப்பிரிக்க வம்சாவளி என்பதால், இன ரீதியாகவும் தாக்குதல்களை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

    English summary
    Carnatic singer Sudha Ragunathan targeted for her daughter plan to marry foreigner, a christian by birth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X