சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு மாடுகள் பங்கேற்க தடை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கேட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கேட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தத்தின் படி தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Case against Foreign Bull in Jallikattu: MHC Adjourns the verdict

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகளவில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்று வருகிறது.

நாட்டு மாடுகளில் உள்ள 'திமில்' பெரிதாக இருப்பதால் மாடு பிடி வீரர்கள் கீழே விழுந்து காயமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மிக சிறிய 'திமில்' கொண்ட வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளை பிடிக்கும் வீரர்கள் சுலபமாக கீழே விழுந்து காயமடைகிறார்கள்.

நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கேட்டு வன புகைப்பட நிபுணர் சேஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 ராஜிவ் காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம்: மத்திய அரசு தகவல் ராஜிவ் காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம்: மத்திய அரசு தகவல்

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நாட்டு மாடுகள் கொண்டு இல்லாமல் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளை பங்கேற்க வைத்து விலையுயர்ந்த கார் போன்ற பரிசுகளை மாட்டின் உரிமையாளர் பெற்று கொள்வது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

English summary
The case against Foreign Bull in Jallikattu: Madras High Court Adjourns the verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X