சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 வருடத்தில் பலகோடி சொத்து குவிப்பு.. A1 விஜயபாஸ்கர்.. A2 யார்? லஞ்ச ஒழிப்புத்துறை FIR சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டை தொடர்ந்து இந்த வழக்கு பதியப்பட்டள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் என்னென்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்ன பார்க்கலாம்.

Recommended Video

    விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உட்பட 43 இடங்களில் ரெய்டு… மனைவி ரம்யா மீதும் வழக்குப்பதிவு... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

    கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வைக்கப்பட்ட புகாரில் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

    அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சொத்து சேர்த‌தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது.

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு.. 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.. வழக்கு பதிவு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு.. 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.. வழக்கு பதிவு

    வழக்கு

    இந்த வழக்கில் ஏ 1 ஆக விஜயபாஸ்கரும், ஏ 2வாக அவரின் மனைவி ரம்யாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் நடத்தி வர கூடிய கல்வி நிறுவனங்களில் முறைகேடு செய்ததாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. ஏ பீட்டர் என்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். சொத்து குவித்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. 6.5 கோடி ரூபாய்க்கு இவர் அசையும் சொத்துக்களை குவித்ததாகவும், கணக்கில் வராத வருமானம் மூலம் 53 லட்சம் ரூபாய்க்கு பிஎம்டபிள்யு வாங்கியதாகவும், 80 சவரன் நகைகளை வாங்கி குவித்ததாகவும் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வி நிறுவனம்

    கல்வி நிறுவனம்

    இவருக்கு சொந்தமான 14 கல்வி நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. 2016க்கு பின் 27 கோடி ரூபாய் வரை இவர் முறைகேடாக சொத்து சேர்த்து இருக்கிறார். அதேபோல் விவசாய நிலங்கள் 3 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களை கணக்கில் வராத வகையில் குவித்து இருக்கிறார்.இவருக்கு சொந்தமான குவாரி, அவரின் சகோதரர் பொறுப்பில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் பலரின் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது.

    புகார்

    புகார்

    லஞ்ச பணத்தில் மூலம் அறக்கட்டளை தொடங்கி முறைகேடாக பணம் வாங்கியதாகவும். முறைகேடாக அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரின் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கிரானைட் எடுக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்ட நிலையில் அங்கும் ரெய்டு நடந்து வருகிறது.

    விஜயபாஸ்கர் ரெய்டு காரணம்

    விஜயபாஸ்கர் ரெய்டு காரணம்

    2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.6 கோடியே 41 லட்சம் மதிப்பில் வருமானமே இருப்பதாக விஜயபாஸ்கர் கணக்கு காண்பித்துள்ளார். செலவு கணக்கு செய்தாக ரூ.34 கோடி கணக்கு காண்பித்துள்ளார். ஆனால் இன்னொரு பக்கம் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.58 கோடி வருவாய் இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார். அதோடு சொத்து 51 கோடி ரூபாய் உள்ளதாக காட்டி உள்ளார். மீதமுள்ள 27 கோடி ரூபாய் வரையிலான சொத்து எப்படி வாங்கப்பட்டது என்ற கணக்கு இல்லாத காரணத்தால் இந்த ரெய்டு நடப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    விஜயபாஸ்கர் ரெய்டு

    விஜயபாஸ்கர் ரெய்டு

    மேலும் கொரோனா காலத்தில் இவர் சுகாதார பொருட்கள், மருந்து பொருட்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் வைக்கப்பட்டது. இதில் பல கோடி மோசடி செய்ததாகவும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ரெய்டு நடத்தப்பட்டள்ளது. விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே 2017ல் வருமான வரித்துறையினர் முறைகேட்டில் ஈடுப்பட்டதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதியப்பட்டது. அதில் சில ஆவணங்களை விஜயபாஸ்கர் மறுத்ததாகவும் புகார் வைக்கப்பட்டது. அதில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    English summary
    Case filed against Ex Minister Vijayabaskar after the raid by Directorate of Vigilance and Anti-Corruption today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X