சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின்சாரத் துறை கேங்மென் பணி நியமனத்தில் முறைகேடு.. சிபிஐ விசாரிக்க கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!

மின்சார துறை கேங்மென் பணிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: மின்சார துறை கேங்மென் பணிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5 ஆயிரம் ஹேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.

Case files against Electricity Department Gang Men recruitment in MHC

இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கி கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை சில தொழிற்சங்கங்கள் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கேங்மென் பதவிக்கு இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 80% பேர் தகுதியில்லாதவர்களாக இருப்பதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே கேங்மென் பணிக்காக ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால் தொடர்புடைய மின்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. இதில் அடுத்தகட்ட விசாரணை 31 ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டது.

English summary
Case files against Electricity Department Gang Men recruitment in Madras High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X