சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய கோரி வழக்கு...அரசுக்கு ஹைகோர்ட் எச்சரிக்கை

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு காரணமாக காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Case for demanding purchase of vegetables directly from farmers: high court ask govt to reply

அந்த மனுவில், விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் விளைநிலங்களிலேயே அவற்றை அழிக்கும் விவசாயிகள், எதிர்காலத்தில் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவர் எனத் தெரிவித்துள்ளார். விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தாலுகா அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.1 ஆக பதிவு-2 பேர் பலி; 22 பேர் படுகாயம்ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.1 ஆக பதிவு-2 பேர் பலி; 22 பேர் படுகாயம்

இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்தரவிட்டது மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த மனு தொடர்பாக ஏன் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வரும் 12ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்

English summary
Case for demanding purchase of vegetables directly from farmers. high court ask govt to reply, if not rply before may 12, We will be fined
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X