சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செங்கல்பட்டு ஆய்வு கூடத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்க கோரி வழக்கு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: அரசின் கட்டுபாட்டில் உள்ள செங்கல்பட்டு ஆய்வு கூடத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்க கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு செங்கல்பட்டு அருகே உள்ள அலப்பாக்கத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல் என்கிற ஆய்வு கூடம் தொடங்கப்பட்டது.. இந்த ஆய்வு கூடத்தில் ராபிஸ் போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்ப மருந்துகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

Case for seeking funding for to find Corona vaccine at Chengalpattu Laboratory

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் செங்கல்பட்டு ஆய்வு கூடத்தில் கொரோனா பரிசோதனை கருவிகள் மற்றும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க போதுமான நிதி, உபகரணங்கள் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் அய்யாதுரை என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

அதில் அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவு பரிசோதனை செய்வதால் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யும் நிலை ஏற்படுகிறது என்றும் அங்கு கொரோனா பரிசோதனைக்கு 4500 முதல் 6000 ரூபாய் வரை வசூலிப்படுவதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்..

வங்கிகள் மட்டும் இதை முறையாக செய்தால்.. நீங்க வாங்கிய கடனுக்கான இஎம்ஐ அதிரடியாக குறையும்!வங்கிகள் மட்டும் இதை முறையாக செய்தால்.. நீங்க வாங்கிய கடனுக்கான இஎம்ஐ அதிரடியாக குறையும்!

மேலும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க சில தனியார் நிறுவனங்களுடன் அரசு கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாவதாகவும், இதுபோன்ற மருந்துகளை தயாரிக்கும் பணியை தனியாரிடம் வழங்காமல் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.டி. ஆஷா அமர்வு, ஜூன் 3-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்..

English summary
Case for seeking funding for to find Corona vaccine at Chengalpattu Laboratory: HC notice to govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X