சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் பேசவே இல்லை.. யாரோ மிமிக்ரி பண்ணிட்டாங்க.. அதிமுக மாஜி எம்எல்ஏ மீது பாய்ந்தது கேஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: "நான் பணம் கொடுத்தேனா... அந்த வீடியோவில் என் பேச்சை யாரோ மிமிக்ரி செய்துவிட்டார்கள்" என்று சொல்லி சமாளித்த முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் இதற்கு முன்பு ஏகப்பட்ட விவகாரங்கள் வேலூர் தொகுதியில் இருந்து நாள்தோறும் வெளிவந்து வெடித்து கொண்டே இருந்தது. அதில் ஒன்றுதான் பணப்பட்டுவாடா செய்த சம்பவமும் அது தொடர்பான வீடியோவும்!

வாணியம்பாடியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார்தான் பணம் பட்டுவாடா குறித்து பேசுகிறார். கையில் ஒரு லிஸ்ட்டை வைத்து கொண்டு ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு சில தொண்டர்களிடம் பேசுகிறார்..

சிலரை அடையாளம் கண்டுள்ளோம்.. குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்.. இலங்கை பிரதமர் ரணில் அதிரடி! சிலரை அடையாளம் கண்டுள்ளோம்.. குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்.. இலங்கை பிரதமர் ரணில் அதிரடி!

ஏசிஎஸ் ஆட்கள்

ஏசிஎஸ் ஆட்கள்

அதில், "ஓட்டுக்கு 500 ரூபாய்.. ஏசி சண்முகத்துக்கு வாக்களிக்கணும்.. அதனால மக்களுக்கு பணம் ஒழுங்கா போய் சேரணும்.. பணம் குடுக்கறதை போலீஸ்காரங்க யாரும பார்த்துடக்கூடாது.. அப்படி போலீஸ் வருதான்னு பார்க்க 2, 3 பேர் நின்னு கவனிக்கணும்.. ஏசிஎஸ் ஆளுங்க இல்லாதவங்களுக்கு காசு தரக்கூடாது" என்று சொல்லி கொண்டே போகிறார்.

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

இப்படி பணம் எப்படி சப்ளை செய்யணும் என்று கோவி.சம்பத்குமார் விலாவரியாக சொன்ன விஷயம், வீடியோவாக தமிழகம் முழுவதும் பரவியது. தேர்தல் வேலூரில் ரத்து செய்யப்பட்டாலும் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது.

மிமிக்ரி

இதை பற்றி சொன்ன கோவி சம்பத்குமார், "அந்த வீடியோவில் என் பேச்சை யாரோ மிமிக்ரி செய்திருக்கிறார்கள். பணம் சப்ளை பண்ணி ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை" என கெத்தாக கூறியிருந்தார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இருந்தாலும், சட்டம் தன் கடமையை செவ்வனே செய்துள்ளது. அதன்படி வாணியம்பாடி தாசில்தாரும் தேர்தல் அலுவலருமான முருகன், வாணியம்பாடி தாலுகா போலீசில் கோவி சம்பத்குமார் மீது புகார் கொடுத்தார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் குறித்து பேசியதாக தன் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

English summary
Vaniyambadi Police case filled on AIADMK Ex MLA Kovi Sambathkumar for his money distribution video leaked
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X