சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உணவு டெலிவரிக்காக ஓவர் ஸ்பீட்.. 616 ஸ்விக்கி, ஜொமோட்டோ பாய்ஸ் மீது வழக்குப்பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக, கைபேசி செயலி மூலம் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் 616 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் ஸ்விக்கி - ஜொமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் உணவை விரைவாக கொண்டு செல்ல வாகன விதிமீறலில் ஈடுபட்டதால் போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சாலைகளில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்குவதால் மெதுவாக செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக சஸ்பென்ட் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக சஸ்பென்ட்

உணவு டெலிவரி

உணவு டெலிவரி

இதற்கிடையே, நன்கு வளர்ச்சியடைந்த சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை அதிகம் காண முடிகிறது. அந்தந்த மாநிலங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கூட ஸ்விக்கி, ஜொமோட்டோ மற்றும் உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

உணவு ஆர்டர்

உணவு ஆர்டர்

உணவு சமைக்காவிட்டால், செல்போனை எடுத்து வேண்டிய உணவை ஆர்டர் மட்டும் செய்து விட்டால் போதும். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்திற்கே உணவு தேடி வந்து விடும். வீடுகள் மட்டுமல்லாது அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சுட சுட டெலிவரி

சுட சுட டெலிவரி

வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில், உணவை சுட சுட டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக, பைக்குகளில் அவர்கள் மின்னல் வேகத்தில் பறப்பதை சாலைகளில் நீங்கள் கண் கூடாக பார்த்திருக்க கூடும். அதே நேரம், உணவை வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகள் எதையும் அவர்கள் கடைபிடிப்பதில்லை என போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில், உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் 616 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இதே போல், மும்பையில் 5,797 உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள். இதில், 2,315 பேர் ஸ்விக்கி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். 1,770 பேர் ஜொமோட்டோ நிறுவனத்தை சேர்ந்தவர்கள். எஞ்சிய 946 பேர் டோமினோஸ் பீட்சா நிறுவனத்திலும், 766 பேர் உபேர் ஈட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்கின்றனர் மும்பை போக்குவரத்து போலீசார்.

English summary
Traffic Violation: Case On 616 Food Delivery Boys in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X