சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: அஜித் நடித்த விவேகம் பட வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளியீடு உரிமையை மலேசியா நிறுவனத்திற்கு வழங்கிய நிலையில் வேறு நிறுவனத்திற்கும் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. மலேசியாவை சேர்ந்த டிஆர்எஸ் பட நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Case to be filed against Vivegam movie producer Sathyajothi Thyagarajan

இயக்குநர் சிவா இயக்கத்தில், அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் விவேகம்.

இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த நிலையில், மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெளியிடும் உரிமை மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர் என்ற படநிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூ.4.25 கோடி இதற்கான விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

பெண் நிருபரை பார்த்து பெண் நிருபரை பார்த்து "அடியே போடி" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ

ஆனால், சத்தியஜோதி நிறுவனம், வேறு நிறுவனத்துக்கும் வெளிநாட்டு உரிமை வழங்கி மோசடி செய்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் இதுகுறித்து 2017ல் டி.எஸ்.ஆர். படநிறுவனத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, டி.எஸ்.ஆர். படநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பி.நாகராஜன், மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்தரம் இருப்பதால் மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Egmore court ordered case to be filed against, Vivegam movie producer Sathyajothi Thyagarajan over fraud case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X