சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் விவகாரம்.. கள்ளக்காதல்.. மொத்தம் 9 கேஸ்.. வாணியம்பாடி சாரதிகுமார் மீது.. அதிர்ச்சியில் திமுக!

திமுக பிரமுகர் சாரதிகுமார் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பெண் விவகாரம், கள்ள தொடர்பு, முறைகேடு, நில அபகரிப்பு இப்படி பல விவகாரங்களில் சிக்கி உள்ள வாணியம்பாடி திமுக பிரமுகர் மீது மொத்தம் 9 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இது திமுக வட்டாரத்தையே பெரும் சலசலப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

Recommended Video

    பெண் விவகாரம்..வாணியம்பாடி சாரதிகுமார் மீது 9 வழக்குகள்

    சென்னை, அடையாறை சேர்ந்தவர் ரம்யா.. 28 வயதாகிறது.. இவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அந்த மனுவிலும் செய்தியாளர்கள் முன்னிலையிலும் சொன்னதாவது:

    "சாரதிகுமாரை நான் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், 2016 பிப்ரவரி 10ல் கல்யாணம் செய்தேன்.. 2 வயசில் பெண் குழந்தை உள்ளது. ஆனால் என்னை கல்யாணம் செய்வதற்கு முன், சாரதிகுமார், சேலம் சட்ட கல்லுாரியில் படித்தபோது, அவரை விட, 15 வயது மூத்தவரான, சத்யபிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இவர்தான் நடுவில்

    இவர்தான் நடுவில்

    சத்யபிரியாவுக்கு கல்யாணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். படுப்பது கூட பார்த்தீங்கன்னா, எனது கணவர் நடுவில் படுத்தால், நான் இந்த பக்கம் படுக்கணும், அந்த அம்மா அந்த பக்கம் படுக்கணும். அவங்க 2 பேரும்தான் கட்டிப்பிடிச்சிட்டு படுப்பாங்க. ஒரு சினிமாவுக்கு போனால்கூட, அவர் நடுவில் இருப்பார். இதை பற்றி பலமுறை கேட்டு தகராறு வெடித்துள்ளது.

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    சத்யபிரியாவுடன் சேர்ந்து, என் கணவர் கும்மாளம் போடுவதை பற்றி, இம்மாதம், 19ம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் தந்தேன்.. அவர் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்.. உடனே என் கணவர், தாலியை கழற்றி தருமாறு கேட்டு, கழுத்தில் கத்தியை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் புகாரிலும் செய்தியாளர்கள் மத்தியிலும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தார்.

    வாணியம்பாடி

    வாணியம்பாடி

    மேலும், சாரதி குமார் சேலம் அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த போட்டோ , வீடியோ , ஆடியோ உரையாடல் போன்ற ஆதாரங்களையும் ரம்யா போலீசாரிடம் ஒப்படைத்தார். அதையடுத்து , வாணியம்பாடி நகரப் பொறுப்பிலிருந்து சாரதி குமார் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் சாரதிகுமார் மீது மேலும் ஒரு புகார் கிளம்பி உள்ளது.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த புகாரிலும் சிக்கியுள்ளார் சாரதி குமார்.

    மனநலம் பாதிப்பு

    மனநலம் பாதிப்பு

    இதுதொடர்பாக வாணியம்பாடியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் திருப்பத்தூர் எஸ்பி ஆபீசில் புகார் தந்தார். அதில், "யோகம்மாள் என்ற 42 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர்.. அவர் ஆதரவற்றவரும்கூட.. தங்கையின் பராமரிப்பில் இருந்தார்.. ஆனால் கடந்த 2015-ல் அவரது தங்கையும் மாரடைப்பால் இறந்துவிட்டார்.. அதனால் யோகம்மாள் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டார். பிறகு என் வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளேன். யோகம்மாளுக்கு செட்டியப்பனூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை, சாரதி குமார் அபகரித்து கொண்டார்.. இதைபற்றி கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

    9 வழக்குகள்

    9 வழக்குகள்

    இந்தப் புகாரின் அடிப்படையிலும், வாணியம்பாடி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி திமுக பிரமுகர் சாரதி குமார், அவரது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, ஜோசப் செல்வகுமார், சரவண பாபு ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மனைவி தந்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவாகி உள்ளன.. இப்போது 6 வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் சாரதிகுமார் மீது பாய்ந்துள்ளது.. இது சம்பந்தமான தொடர் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    English summary
    cases filed in 9 sections against vaniyambadi dmk cadre sarathikumar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X