சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் கிட்ட ஜாதி இருக்கு.. உன் கிட்ட பணம் இருக்கு.. டீல் பேசிக்கலாமா.. கல்லா கட்டும் சிறு கட்சிகள்

சிறு கட்சிகள், ஜாதி கட்சிகள் காட்டில் பண மழை கொட்டி வருகிறதாம்.

Google Oneindia Tamil News

சென்னை: எப்படியோ.. சிறு கட்சிகள், ஜாதி கட்சிகளுக்கு எல்லாம் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காது.. ஆனாலும் இவங்களுக்கு தீபாவளிதான்.. எப்படி தெரியுமா?

தேர்தல் வந்துவிட்டால் சரி, இந்த சிறுகட்சிகள், ஜாதிக்கட்சிகள் ஜாலியாகி விடுவார்கள். ஆளுக்கு ஒரு பக்கம் சுயேச்சையாக நின்று கொள்வார்கள்.

பிறகு "மக்கள் ஆதரவு எங்களுக்குத்தான்" என்று ஒரு பீதியையும் கிளப்புவார்கள். உண்மையிலேயே பார்த்தால், இவங்களுக்கு என்று ஒரு பின்புலமும் இருக்காது, பொருளாதார வசதியும் இருக்காது.

நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தம்

ஏற்கனவே தோல்வி பயத்தில் இருக்கும் பிரதான கட்சிகளுக்கு இந்த சுயேச்சைகளின் நடமாட்டத்தை தொகுதிக்குள் பார்த்தால் அடிவயிற்றில் அள்ளு கிளம்பும். அதனால் இவர்களை வேறுவழியின்றி ஆதரிக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவார்கள்.

கண்டிஷன்கள்

கண்டிஷன்கள்

அது மட்டுமில்லை, சில சமயம் இந்த சிறு கட்சிக்காரர்கள் தங்களுக்கு இது இது வேண்டும் என கண்டிஷன்களே போடுவார்கள். எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அதை அப்படியே ஒத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளும்கட்சியோ எதிர்க்கட்சியோ வந்துவிடுவார்கள்.

ஒரே மாதிரி பெயர்

ஒரே மாதிரி பெயர்

அதுபோலவேதான் இந்த முறையும் வேலையை காட்ட ஆரம்பித்து உள்ளார்களாம் சிறு கட்சிகளும், ஜாதி கட்சிகளும்! இந்த முறை ஒரு டெக்னிக் என்னவென்றால், பெரிய பெரிய கட்சிகள் போலவே, முக்கியமான வேட்பாளர்களின் பெயர்களை போலவே, தங்கள் கட்சிக்கும், அப்படி ஒரு பெயரை வைத்து கொள்கிறார்களாம்.

செலவுகள்

செலவுகள்

இதனால் மக்கள் இவர்களை பார்த்து பெரிய கட்சியின் வேட்பாளர் என்று குழம்பிவிடுகிறார்களாம். ஓட்டுக்களை பிரிக்கவே இந்த டெக்னிக் இப்போது ஆரம்பித்துள்ளார்களாம். இதனால் இவர்களை பார்த்தாலே தங்கள் பக்கம் வளைத்து போட்டு வருகிறதாம் பெரிய கட்சிகள். இந்த சிறு கட்சிகள் சார்பாக வேட்பாளர்களின் செலவு முதல் குடும்ப செலவு வரை அத்தனையையும் இவர்கள் தலையில்தான்!

லட்சங்கள்

லட்சங்கள்

இதேதான், சாதீயரீதியான அமைப்புகளும் செய்ய ஆரம்பித்துள்ளன. இவர்களிடம் பிரதான கட்சிகள் நேரிடையாகவே உட்கார்ந்து பேச்சுவார்த்தையே நடத்துகிறார்களாம். முடிந்தவரை சுயேச்சையாக போட்டியிடுபவர்களை சில லட்சங்களை தந்து வாபஸ் பெறவும் வைத்துவருகிறார்களாம்.

காட்டில் மழை

காட்டில் மழை

ஒரு பக்கம் பணத்தை தந்து செட்டில் செய்துவிட்டாலும், மற்றொரு பக்கம் இவர்களிடமிருக்கும் ஆதரவாளர்களை தங்கள் வாக்காளர்களாக அப்படியே மாற்றி கொள்கிறார்கள். ஆக மொத்தம், வெறும் சாதியை வைத்து கொண்டு ஆட்டம் காட்டுபவர்களின் காட்டில் பண மழை கொட்டி வருகிறதாம்!

English summary
Caste organizations and small parties are negotiating with Political Parties and making money in this MP Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X