சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்… தமிழிசை ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொன்னமராவதி, பொன்பரப்பி சம்பவங்கள் கவலை அளிக்கிறது : தமிழிசை வேதனை

    சென்னை: மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பெண் அதிகாரி சென்றது தவறு என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

    இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் கடந்த 18 ம் தேதி, தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள மற்றொரு அறைக்குள் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    Caste, religious riots Stopped with an iron suppress, Tamilisai turmoil

    அந்த அறையில் சுமார் 3 மணிநேரம் இருந்து ஆவணங்களை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு சென்ற மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமுமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனிடம், அவர்கள் புகார் அளித்தனர்.

    இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பெண் அதிகாரி சென்றது தவறு என்றும், வேண்டுமென்றால் அனுமதி பெற்று சென்றிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இருக்கு.. இன்னும் 4 நாட்களுக்கு நல்ல மழை இருக்கு.. வானிலை மையம் குட் நியூஸ்! இருக்கு.. இன்னும் 4 நாட்களுக்கு நல்ல மழை இருக்கு.. வானிலை மையம் குட் நியூஸ்!

    மேலும், பொன்னமராவதி, பொன்பரப்பி ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், எந்த நாடாக இருந்தாலும் கலவரத்தை அனுமதிக்க முடியாது என்றும் தமிழிசை கூறினார்

    English summary
    Tamilisai Said that Caste, religious riots Stopped with an iron suppress
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X