சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனே நிறைவேற்றுக… அதிமுக தேர்தல் அறிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    பல திட்டங்களுடன் வெளியானது தேர்தல் அறிக்கை

    சென்னை: காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2019 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    Cauvery - Godavari link project will be mplement: AIADMK election Manifesto

    அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வாசித்தார். அதில், மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

    சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்... திமுக தேர்தல் அறிக்கை சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்... திமுக தேர்தல் அறிக்கை

    அந்த வகையில், வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம் எனவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Cauvery - Godavari link project will be mplement: AIADMK election Manifesto

    அதேபோல், காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.

    காவிரி - கோதாவரி ஆறுகளை ஸ்டீல் பைப்புகள் மூலம் இணைக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளது என்றும் இது அமைச்சரவை ஒப்புதலுக்காக விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cauvery - Godavari link project immediately execute : AIADMK Election Manifesto
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X