சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை டெல்லியில் நடக்க உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை கூட்டம், வருகிற 28ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. சுப்ரீம்கோர்ட் உத்தரவின் பேரிலேயே இவை அமைக்கப்பட்டன.

இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரிசல்ட் வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புகிறார்கள்.. இணைந்திருப்போம்.. அமித் ஷா ஆவேசம் ரிசல்ட் வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புகிறார்கள்.. இணைந்திருப்போம்.. அமித் ஷா ஆவேசம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக சென்ற வருடம் டிசம்பர் 3ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. ஒழுங்காற்று குழு கூட்டமும் ஆகஸ்ட் 9 ம் தேதி நடந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கான காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று கூட்டம் ஆகியவை ஒருமுறை கூட நடத்தப்படவில்லை.

விவசாயிகள் கவலை

விவசாயிகள் கவலை

இதனிடையே, குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் ஆணையம் இதைபற்றி எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒழுங்காற்று குழு கூட்டம்

ஒழுங்காற்று குழு கூட்டம்

இந்நிலையில்தான் நாளை டெல்லியில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவது தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என்றும், அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழகம் தனது எதிர்ப்பு பதிவு செய்யும் என்றும் தெரிகிறது.

மேலாண்மை கூட்டம்

மேலாண்மை கூட்டம்

மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இது சம்பந்தமாக காரசார விவாதம் நிச்சயம் எழ வாய்ப்புள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு மேலாண்மை ஆணையம்தான் எடுக்க முடியும். அதனால் வருகிற 28ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
Cauvery Water Regulation Committee would meet tomorrow and Cauvery Management Commission meeting held on May 28th in Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X