சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 வாரங்கள் கடந்துவிட்டன… முகிலன் எங்கே? விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி

Google Oneindia Tamil News

சென்னை:சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றியதையடுத்து விசாரணை தொடங்கி இருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர் முகிலன். அந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கடந்த 14ம் தேதி சென்னையில் ஆவண படம் ஒன்று வெளியிட்டார்.

அந்த ஆவணப்படம் வெளியிட்ட மறுநாளே அதாவது கடந்த 15ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவர் திடீரென மாயமானார். இதையடுத்து கடந்த 17ம்தேதி எழும்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர், இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி புகார் ஒன்று அளித்தார்.

மீண்டும் அதே தொகுதி.. நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா முடிவு.. திமுக சார்பாக விருப்பமனு தாக்கல்! மீண்டும் அதே தொகுதி.. நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா முடிவு.. திமுக சார்பாக விருப்பமனு தாக்கல்!

சிசிடிவி பதிவுகள்

சிசிடிவி பதிவுகள்

அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலன் செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரணை நடத்தினர். அப்போது, முகிலன் சம்பவத்தன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அவரது செல்போன் சிக்னல் செங்கல்பட்டு வரை இருந்துள்ளது. அதன் பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடிக்கு மாற்றம்

சிபிசிஐடிக்கு மாற்றம்

மாயமாகி 10 நாட்கள் ஆகியும் முகிலனை ரயில்வே போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

2 மணி நேரம் விசாரணை

2 மணி நேரம் விசாரணை

அதன்படி முகிலன் மாயமான வழக்கை, தமிழக டிஜிபி.டி.கே.ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு மாணவர், இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணியிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

புகார் மனு

புகார் மனு

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் செயலாளர் முகம்மது கவுஸ் என்பவர் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பொதுக்கூட்டம் நடத்தினேன்

பொதுக்கூட்டம் நடத்தினேன்

முகிலனை கண்டுபிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தி அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாகராஜன் என்பவர் சமாதி என்று வார்த்தையை பதிவிட்டார்.

சமாதி என பதிவு

சமாதி என பதிவு

மேலும் சமாதி என்று பதிவிட்டவர் ராஜபாளையத்தை சேர்ந்த நாகராஜன் நாராயணன் என்பவர் காவல் உடையில் உள்ளார். இதையடுத்து அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் புகார் அளித்துள்ளோம். இதையடுத்து காவல் ஆய்வாளரை திங்கள் கிழமை சம்மன் அனுப்பி விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.

English summary
CBCID Investigation has begun following the disappearance of environmental activist Mugilan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X