சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முகிலனை நாய் கடித்துள்ளது.. சிபிசிஐடி விசாரணையின்போது தகவல்.. மருத்துவ சிகிச்சை

முகிலனை நாய் கடித்துவிட்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையின்போது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு மாயமான, சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வேலூர் அடுக்கம்பறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதாக கூறப்பட்டது.

அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சமூக போராளி முகிலன் பிடிப்பட்டது எப்படி? திருப்பதி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேட்டிசமூக போராளி முகிலன் பிடிப்பட்டது எப்படி? திருப்பதி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேட்டி

நாய் கடித்துள்ளது

நாய் கடித்துள்ளது

ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது காலில் நாய் கடித்துவிட்டதாகவும் இதை பற்றி போலீசாரிடம் முகிலன் தெரிவித்துள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளார்கள்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளதாகவும் சரியாக சாப்பிடாததால்தான், உடல் பலவீனமாக இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி மற்றும் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

கேள்விகள்

கேள்விகள்

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்றது. முகிலனின் வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. இத்தனை நாள் எங்கே இருந்தார், யாரிடம் இருந்தார் உள்ளட்ட கேள்விகளை போலீசார் முகிலனிடம் கேட்டனர்.

கோர்ட்

கோர்ட்

முகிலன் பலவீனமாக இருப்பதாக வந்த மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் ஒப்படைக்கவுள்ளது சிபிசிஐடி போலீஸார். முகிலனும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படுவார்.

English summary
CBCID Police are investigation from Activist Mukilan in Chennai and also says that dog had bitten Mukilan one week before
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X