சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. உதித் சூர்யாவுக்கு பின்னர் ஒரு மாணவி உள்பட 4 பேர் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வில் முறைகேடு.. உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஒப்புதல்-வீடியோ

    சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு செய்ததாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் அவர் மோசடி செய்தது உறுதியானது. இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவான உதித் சூர்யாவை போலீஸார் தேடி வந்தனர்.

    அவரை கடந்த புதன்கிழமை திருப்பதி மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த உதித் சூர்யாவை போலீஸார் கைது செய்தனர். இந்த ஆள்மாறாட்டத்திற்கு பிறகு பல்வேறு கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தபபட்டது.

    என்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்!என்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்!

    எம்பிபிஎஸ்

    எம்பிபிஎஸ்

    இதில் ஏற்கெனவே பல மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் படித்து வருவதும் இதற்காக கேரளம், மகாராஷ்டிரத்தில் புரோக்கர்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள் குறித்தும் தரகர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆள்மாறாட்டம்

    ஆள்மாறாட்டம்

    இதில் முதல் கட்டமாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் ஒரு மாணவி உள்பட 4 மாணவர்களும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரும் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பாலாஜி மருத்துவ கல்லூரி

    பாலாஜி மருத்துவ கல்லூரி

    ஒரு மாணவர் பெயர் பிரவீண் என்றும் அவர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் ராகுல், இவர் பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.

    திருப்போரூர் மாணவி

    திருப்போரூர் மாணவி

    மற்றொரு மாணவியின் பெயர் அபிராமி. இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மாணவராவார். இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    English summary
    CBCID police arrests 4 students who impersonates in Neet Exam 3 from Chennai and one from Dharmapuri.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X