சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு!!

Google Oneindia Tamil News

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சேகா் ரெட்டி தொடர்பான வழக்கை முடித்து வைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016ல் பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது. இந்த நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக புகார் எழுந்தது.

CBI has acquitted Sekhar Reddy in the illegal money exchange case

இதையடுத்து, சென்னையில் இருக்கும் சேகா் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரது வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இது தொடா்பாக சேகா் ரெட்டி உள்பட அவரது நண்பா்கள் 6 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மொத்தம், ரூ.24 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து, சேகர் ரெட்டி மற்றும் பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவர்கள் அனைவரும் ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சிபிஐ மனு தாக்கல் செய்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜவஹா், சேகா் ரெட்டி உள்பட 6 போ் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் சேகர் ரெட்டி மீது மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏற்கனவே 2 வழக்குகளில் போதிய ஆதராங்கள் இல்லை என்று முடித்து வைக்கப்பட்டன. தற்போது அவர் மீதான 3வது வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என்று சிபிஐ மனு தாக்கல் செய்து, அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

English summary
CBI has acquitted Sekhar Reddy in the illegal money exchange case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X