சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மகன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றர்.

    சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

     அட போங்கப்பா.. எத்தனையாவது முறை ரெய்டுனு மறந்தே போய்விட்டேன்.. கார்த்தி சிதம்பரம் நக்கல் அட போங்கப்பா.. எத்தனையாவது முறை ரெய்டுனு மறந்தே போய்விட்டேன்.. கார்த்தி சிதம்பரம் நக்கல்

    சோதனை

    சோதனை

    சென்னை, மும்பை, ஒடிசா மற்றும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இப்போது சோதனை நடத்தி வருகின்றனர். கார்த்தி சிதம்பரம், அவரது கூட்டாளி பாஸ்கரன் ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய வழக்கு

    புதிய வழக்கு

    முறைகேடாக லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். 2010-14க்கு இடையில் பஞ்சாபில் ஒரு மின் திட்டத்திற்காகச் சீனர்களை பணியமர்த்த அவர்களுக்கு எளிதாக விசா கிடைக்க ரூபாய் 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பல வழக்குகள்

    பல வழக்குகள்

    பல்வேறு வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது தந்தை ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது 305 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றதற்காக ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) அனுமதி வழங்கியது, ஏர்டெல் மேக்சிஸ் உட்பட பல வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

    சோதனை

    சோதனை

    இதில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணையின் போது தான், ​​இந்தப் புதிய வழக்கு தொடர்பான தகவல்கள் சிபிஐக்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தான் சென்னை, டெல்லி என மொத்தம் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அதேநேரம் எந்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பதை சிபிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    சிபிஐ விளக்கம்

    சிபிஐ விளக்கம்

    இதனிடையே கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் ரெய்டு குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. சீன நிறுவனத்தைச் சேர்ந்த 263 பேருக்கு முறைகேடாக விசா பெற்ற விவகாரத்தில் ரெய்டு நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. விசா முறைகேடு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    CBI raid Congress leader Chidambaram related residence at multiple locations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X